மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலுடன் துவங்கியது வாக்குப்பதிவு!

மத்திய பிரதேசம், மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது!

Last Updated : Nov 28, 2018, 08:18 AM IST
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலுடன் துவங்கியது வாக்குப்பதிவு! title=

மத்திய பிரதேசம், மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது!

மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனையடுத்து கடந்த நவம்பர் 12-ஆம் நாள் மற்றும் நவம்பர் 20-ஆம் நாள் என சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இந்நிலையில் இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் மட்டும்  காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த இரு மாநிலகங்களிலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தேர்தல் நடைபெற வேண்டி மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இரு மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளும் வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும். 

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைப்பெற்று வருகின்றது, பாஜக-விடம் இருந்து ஆட்சியை பெற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அம்மாநிலத்தில் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் லால் தானஹவாலா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வருகின்றது, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பெற பாஜக முனைப்புடன் களமிறங்கி தீவிர பிரசாரம் செய்திருக்கிறது. இருகட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தாலும் வரும் டிசம்பர் 11-ஆம் நாள் தான் யாருக்கு இந்த பிரச்சாரம் பலன் அளித்தது என தெரியவரும்!

Trending News