அசாம் வெள்ளம்: சுமார் 45 லட்சம் பேர் பாதிப்பு, நெடுஞ்சாலைகளில் மக்கள் தஞ்சம்

Assam Floods: கடந்த 24 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் உள்ள 3,510 கிராமங்களைச் சேர்ந்த 33,03,316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 91658.49 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2022, 09:01 AM IST
  • அசாமின் நாகோன் மாவட்டத்தில் சுமார் 5.03 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
  • ரஹா வருவாய் வட்டத்திற்குட்பட்ட 155 கிராமங்களைச் சேர்ந்த 1.42 லட்சம் மக்கள் தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த வெள்ளத்தால் கம்பூர் வருவாய் வட்டப் பகுதிகளில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள், கரைகள் சேதமடைந்தன.
அசாம் வெள்ளம்: சுமார் 45 லட்சம் பேர் பாதிப்பு, நெடுஞ்சாலைகளில் மக்கள் தஞ்சம் title=

நாகோன்: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 5.03 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அசாமின் நாகோன் மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால், பலர் கரைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அசாமின் நாகோன் மாவட்டத்தில் சுமார் 5.03 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. நாகோன் மாவட்டத்தில் உள்ள ராஹா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

அசாமின் ரஹா வருவாய் வட்டத்திற்குட்பட்ட 155 கிராமங்களைச் சேர்ந்த 1.42 லட்சம் மக்கள் தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகோன் மாவட்டத்தில், நிவாரண முகாமிலேயே குழந்தைகள் பாலர் பள்ளி செயல்பாடுகளில் பங்கேற்கின்றனர்.

"நாங்கள் நிவாரண முகாமில் (நாகோன்) பாலர் பள்ளி நடவடிக்கைகளில் குழந்தைகளை பங்கேற்க வைக்கிறோம். காலை பிரார்த்தனை, உடல் பயிற்சிகள், வண்ணம் பூசுதல், வரைதல் என பலவற்றில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முன்னதாக இந்த முகாமுக்கு வருகை தந்தார்," என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மேற்பார்வையாளர் என்பி டோலி ANI இடம் தெரிவித்தார்.

45.34 லட்சம் மக்கள் இன்னும் வெள்ளத்தில் தத்தளித்து வருவதால், அசாமில் வெள்ள நிலைமை வெள்ளிக்கிழமை மிகவும் மோசமாக இருந்தது.

மேலும் படிக்க | ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்... காரணம் என்ன? 

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் மழை வெள்ளத்துக்கு பலியானார்கள். மொத்த இறப்பு எண்ணிக்கை 117 ஆக உள்ளது. 117 இறப்புகளில், 100 பேர் வெள்ளத்தில் இறந்தனர், 17 பேர் நிலச்சரிவில் இறந்தனர்.

கச்சார் மாவட்டத்தின் சில்சார் பகுதியில் வெள்ளப்பெருக்கு மேப்பிங்கை மேற்கொள்வதற்கும், அணுக முடியாத பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாக் செய்யப்பட்ட குடிநீர், அரிசி உட்பட 85.2 மெட்ரிக் டன் ஜிஆர் பொருட்கள் இன்று குவஹாத்தி மற்றும் ஜோர்ஹாட்டில் இருந்து சில்ச்சருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

தேசிய பேரிடர் மீட்புப் படை (எண்டிஆர்எஃப்) பணியாளர்கள் மற்றும் எஸ்டிஆர்எஃப், தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள், காவல்துறை மற்றும் AAPDA MITRA தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரண விநியோகங்களில் மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் உள்ள 3,510 கிராமங்களைச் சேர்ந்த 33,03,316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 91658.49 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. 

"பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் 717 நிவாரண முகாம்களும், 409 நிவாரண விநியோக மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,65,788 பேர் இந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இடைவிடாத மழையால் உருவாகும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் வெள்ள நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. எனினும் கம்பூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகள் இன்னும் வெள்ள நீரில் உள்ளன.

இந்த வெள்ளத்தால் கம்பூர் வருவாய் வட்டப் பகுதிகளில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள், கரைகள் சேதமடைந்தன.

மேலும் படிக்க | நாங்கள் யாருக்கும் பயப்படப் போவதில்லை. எங்களிடம் தான் பெரும்பான்மை -ஏக்நாத் ஷிண்டே 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News