அசாம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது

Last Updated : Apr 11, 2017, 10:59 AM IST
அசாம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது  title=

கோர்ட்டில் ஆஜராகாத டெல்லி முதல்வரான மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய கெஜ்ரிவால், நரேந்திர மோடி 12-ம் வகுப்பு வரை தான் படித்திருந்ததாகவும், அவர் வெளியிட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியானவை என டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். 

இதனையடுத்து கெஜ்ரிவால் மீது பாஜக-வை சேர்ந்த கர்பி அங்லோங் என்பவர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. 

இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து வழக்கை வரும் மே 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Trending News