இராணுவ ஆயுதப்படை ஆட்சேர்ப்பு: இராணுவ ஆயுதப்படையில் 10வது, 12வது படித்தவர்களை இராணுவ ஆயுதப்படை ஆட்சேர்ப்பு உங்களை அழைக்கிறது. மேலும் இந்த பணி குறித்து முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆயுதப் படைப்பிரிவில் பணிப்புரிய தகுதிகள்: திறன் சோதனை,எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செயல்முறையை நடத்துகின்றனர். விண்ணப்பதாரர்கள் வேலை அறிவிப்பில் குறிப்பிட்ட தகுதி அளவுகோல்கள், வயது வரம்புகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் அனைத்தும் கவனமுடன் தெரிந்தபின் விண்ணப்பம் செய்யுங்கள். மேலும் இந்த பணிகுறித்து உங்கள் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே செய்தியைச் சொல்ல மறக்காதீர்கள்.
இராணுவ ஆயுதப்படை ஆட்சேர்ப்பு விவரங்கள்: வாரியத்தின் பெயர் இராணுவ ஆயுதப்படையில் 723 காலியிடங்கள் உள்ளன. பணியின் பெயர் MTSவில் அலுவலக உதவியாளர், தீயணைப்பு வீரர் பணி காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 02-12-2024 மற்றும் கடைசி தேதி 22-12-2024 குறிப்பிட்ட இந்த இரண்டு பணிக்கான கல்வி தகுதி10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீங்கள் இந்தியராக இருத்தல் வேண்டும். விண்ணப்ப முறை ஆன்லைன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aocrecruitment.gov.in /
இராணுவ ஆயுதப்படைப்பிரிவில் காலியிடங்களின் விவர பட்டியல்: இராணுவ ஆயுதப்படையில் அஞ்சல் எண் பொருள் உதவியாளர் 19 காலியிடங்கள் உள்ளன. இளநிலை அலுவலக உதவியாளர் 27 காலியிடங்கள் உள்ளன. சிவில் மோட்டார் டிரைவர் 4 காலியிடங்கள் உள்ளன. டெலி ஆபரேட்டர் 14 காலியிடங்கள் உள்ளன. தீயணைப்பு வீரர் 247 காலியிடங்கள் உள்ளன. தச்சர் & இணைப்பாளர் 07 காலியிடங்கள் உள்ளன. ஓவியர் & டெக்கரேட்டர் 05 காலியிடங்கள் உள்ளன. MTS 11 காலியிடங்கள் உள்ளன. வர்த்தக மேலாளர் மேட் 389 காலியிடங்கள் உள்ளன.
இராணுவ ஆயுதப்படைப்பிரிவில் பணிப்புரிய கல்விதகுதி: மேல் கூறிய அனைத்து பணிகளுக்கும் கல்வித் தகுதி இங்கு விரிவாகப் பார்க்கலாம். பொருள் உதவி பணிக்குத் தேவையான கல்வித்தகுதி நீங்கள் ஏதேனும் பட்டம் பெற்றவர்களாகவும் அதில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ஜூனியர் அலுவலக உதவியாளர் பணிக்குத் தேவையான கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் மோட்டார் டிரைவர் பணிக்கு தேவையான கல்வி தகுதி இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும் மற்றும் எச். எம். வி உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கண்டிப்பாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு வீரர்விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தச்சர் & இணைப்பாளர் பணிக்கு நீங்கள் இதுத்தொடர்பான வேலையில் 3 ஆண்டுகள் அனுபவம் அல்லது பத்தாம் வகுப்பு ஐடிஐ சம்பந்தப்பட்ட துறையில் ஓவியர் & டெக்கரேட்டர்தொடர்புடைய துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ MTS விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை..மக்களுக்காக அரசு வேலை காத்திருப்பு!
இராணுவ ஆயுதப்படை பணிக்கான சம்பள பட்டியல்: பொருள் உதவியாளர் Rs.29,200 முதல் Rs.92,300, ஜூனியர் அலுவலக உதவியாளர் Rs.19,900 முதல் Rs.63,200, சிவில் மோட்டார் டிரைவர் Rs.19,900 முதல் Rs.63,200, தொலைத் தொடர்பு ஆபரேட்டர் Rs.19,900 முதல் Rs.63,200, தீயணைப்பு வீரர் Rs.19,900 முதல் Rs.63,200, தச்சு & இணைப்பாளர் Rs.19,900 முதல் Rs.63,200, பெயிண்டர் & டெக்கரேட்டர் Rs.19,900 முதல் Rs.63,200, MTS Rs.18,000 முதல் Rs.56,900 வரை, வர்த்தகர்கள் Mate Rs.18,000 to Rs.56,900.
இராணுவ ஆயுதப்படை தேர்வு செயல்முறை விவரங்கள் : திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செயல்முறையை டி. எம். பி நடத்தும். விண்ணப்பிக்கும் படிவம் இதனை கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். https://aocrecruitment.gov.in /
மேலும் படிக்க | 10th மற்றும் 12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..எழுதப்படிக்க தெரிந்தால்போதும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ