Kerala HC: பிரதமரின் புகைப்படத்துடன் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பது தவறா?

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பதில் என்ன தவறு என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 10:54 AM IST
  • தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம்
  • தனிப்பட்ட சான்றிதழில் புகைப்படம் எதற்கு? மனுதாரர் கேள்வி
  • கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம்பெறுவது அடிப்படை உரிமை மீறல்
Kerala HC: பிரதமரின் புகைப்படத்துடன் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பது தவறா?   title=

தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படத்திற்கு எதிரான மனு தொடர்பான வழக்கில், 'பிரதமரை நினைத்து நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்?' என்று கேரள உயர் நீதிமன்றம்  மனுதாரரிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"அவர் மக்கள் ஆணையின் மூலம் ஆட்சிக்கு வந்தார்.. அரசியல் கருத்துக்கள் மாறுபடலாம், ஆனால் அவர் இன்னும் எங்கள் பிரதமர்" என்று நீதிமன்றம் கூறியது. நாட்டு மக்களால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பதில் என்ன தவறு என்று கேரள உயர்நீதிமன்றம் வியப்புடன் கேள்வி எழுப்பியது.

தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் படத்தை நீக்கக் கோரிய மனுவின் தன்மையை ஆராய்ந்த நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், பிரதமரைப் பற்றி நினைத்து வெட்கப்படுகிறீர்களா? என்று மனுதாரரிடம் கேட்டார். பிரதமர் (Prime Minister) நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், சான்றிதழில் அவரது புகைப்படம் இருப்பதில் என்ன தவறு என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Also Read | 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்

அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர், மற்ற நாடுகளில் இதுபோன்ற நடைமுறை இல்லை என தெரிவித்தார். அதற்கு,, “அவர்கள் தங்கள் பிரதமர்களைப் பற்றி பெருமை கொள்ளாமல் இருக்கலாம், ஆனால், நாங்கள் நமது பிரதமரைப் பற்றி பெருமைப்படுகிறோம்” என்று நீதிபதி தெரிவித்தார். 

"பிரதமரைப் பற்றி நீங்கள் (மனுதாரர்) ஏன் வெட்கப்படுகிறீர்கள்? அவர் மக்கள் ஆணையின் மூலம் ஆட்சிக்கு வந்தார். எங்களுக்கு வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் அவர் இன்னும் நமது பிரதமர் தான்" என்று நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பேசிய மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பீட்டர் மைலிபரம்பில், கோவிட் தடுப்பூசி சான்றிதழானது தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிரத்யேகமான சான்றிதழ்.  தனிநபரின் தனியுரிமைக்குள் ஊடுருவுவது பொருத்தமற்றது என்று கூறினார்.

READ ALSO | கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை

சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தைச் சேர்ப்பது (Prime Minister's photo to the certificate) என்பது, தனிநபரின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலாகும் என்றும் அவர் வாதிட்டார்.

இதற்கு தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, நாட்டின் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை, உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது என்று கூறிய நீதிபதி கேள்வி எழுப்பினார். 

மேலும், இந்த மனுவில் ஏதேனும் தகுதி உள்ளதா என்பதை ஆராய்வதாகவும், இல்லையென்றால், வழக்கை முடித்துக் கொள்வதாகவும் நீதிமன்றம் கூறியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜித் ஜாய், பிரதமரைப் பற்றி பெருமைப்பட வேண்டுமா இல்லையா என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார்.

PM

மேலும், பொதுப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதால், இது அரசியல் கருத்து வேறுபாடு அல்ல என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.  சான்றிதழ்களில் புகைப்படம் இருப்பது வாக்காளர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலின் போது இந்த பிரச்னை எழுப்பப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு (Central government), விளம்பர நலன் சார்ந்த வழக்கு என்று கூறி  எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மனுவை தாக்கல் செய்த மனுதாரர் ஒரு மூத்த குடிமகன் ஆவார். அவர், தனது தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது என்பது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ | தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News