வெளியானது போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஹால் டிக்கெட்! டவுன்லோடு செய்வது எப்படி?

AP Police Constable Admit Card 2023: ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை ஜனவரி 22, 2023 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது .  

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2023, 12:27 PM IST
  • ஆந்திர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது.
  • ஜனவரி 22, 2023 அன்று தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
  • 6100 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வெளியானது போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஹால் டிக்கெட்! டவுன்லோடு செய்வது எப்படி? title=

AP Police Constable Admit Card 2023: ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) ஆனது ஜனவரி 12ம் தேதியான இன்று 2023ம் ஆண்டுக்கான ஆந்திர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது.  போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை எழுத விண்ணப்பித்து இருப்பவர்கள் slprb.ap.gov.in என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சரிபார்த்து ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.  2023ம் ஆண்டில் நடைபெறும் ஆந்திர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் பண்ணிக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய நீங்கள் உங்களது ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் ஹால் டிக்கெட் நம்பரை உள்ளிட வேண்டும்.

மேலும் படிக்க | Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

ஆந்திர போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஹால் டிக்கெட் ஆனது கடந்த ஜனவரி 9ம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.  ஆனால் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டதால் ஹால் டிக்கெட் அந்த தேதியில் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.  ஆந்திர பிரதேச மாநிலத்தில் காலியாக இருக்கும் கிட்டத்தட்ட 6100 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

ap

ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை ஜனவரி 22, 2023 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு வரும்பொழுது மறக்காமல் ஹால் டிக்கெட்டையும், அதனுடன் அடையாள சான்றையும் எடுத்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 500 ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்... டாடா நிறுவனம் அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News