திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. அதில் இருந்து லட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த தீட்டை சரி செய்யும் விதமாக முன்பு திருப்பதி கோவிலை சுத்தம் செய்தார். பிறகு தனது 11 நாள் தவத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு திருமலைக்கு பாதயாத்திரையாக வந்தடைந்தார். பிரபல நடிகராக இருந்து, தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கும் பவன் கல்யாண் தன்னை சனாதன தர்மத்தின் பாதுகாவலராக நிலைநிறுத்திக் கொள்வதற்காக திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு மூன்று மணி நேர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை.....மம்தா பானர்ஜி
"திருப்பதி லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது மிகப்பெரிய பிரச்சனை. இதனை சாதாரணமாக விட முடியாது. எத்தனை நாட்களாக இந்த கலப்படம் நடக்கிறது என்று தெரியவில்லை. தவம் என்பது இந்து மதத்தின் பாதுகாப்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான ஒரு அர்ப்பணிப்பாகும். இது அனைவருக்கும் குடுத்து வைக்காது" என்று திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளும் முன்பு பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். மேலும் இதற்கு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தின் கீழ் இந்து கோயில்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டதாக பவன் கல்யாண் குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனையை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
தனது தவம் 10வது நாளை எட்டியுள்ள நிலையில், வியாழன் அன்று முழு தவத்தை முடிந்த பிறகு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்றும் கூறினார். அதன் பிறகு பவன் கல்யாண் வியாழன் மாலை திருமலையில் இருந்து விஜயவாடா திரும்புவார். கடந்த மாதம் திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது பூதாகரமாக வெடித்த நிலையில், கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுவில் தான் இந்த கலப்படம் நடந்தது என்று துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார். திருப்பதி லட்டு விசயத்தை யாரும் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது என்று அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உச்சநீதிமன்றம் பதிலடி
முன்னாள் அரசாங்கம் கோடிக்கணக்கான பக்தர்களால் போற்றப்படும் திருப்பதி லட்டுவில் தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளை பயன்படுத்தியதாக சந்திர பாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். கடந்த செப்டம்பர் 18-ம் தேதி இதனை பற்றி முதல் முறையாக பேசி இருந்தார். இதற்கு அடுத்த நாள் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை இருப்பதாக ஆய்வக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் தொடர்பான தெளிவாக ஆய்வு அறிக்கை இல்லை என்றும் இதனை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் தற்போதையை அரசை கேள்வி கேட்டு உள்ளது. மேலும் கடவுளை அரசியல் செய்ய வேண்டாம் எனவும், இதில் இருந்து விலகி இருங்கள் என்றும் குறிப்பிட்டது. எதனை வைத்து மாட்டு கொழுப்பு கலைக்கப்பட்டது என்று பொதுவெளியில் பேசினீர்கள் என்றும் சந்திர பாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பி உள்ளது நீதிமன்றம்.
மேலும் படிக்க | கோமியம் குடித்தால் தான் அனுமதி! பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ