புது தில்லி (New Delhi): IAFகமாண்டர்கள் நிலையிலான மூன்று நாள் மாநாடு புதுதில்லியில் உள்ள விமானத் தலைமையகமான வாயு பவனில் நடைபெறுகிறது.
மாநாட்டின் கருப்பொருள் "அடுத்த தசாப்தத்தில் இந்திய விமானப்படை" என்பதாகும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டை தொடக்கி வைக்கிறார். இதில் பாதுகாப்பு செயலரும் பாதுகாப்பு உற்பத்தி துறை செயலாளரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டிற்கு விமானப்படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா (Air Chief Marshal RKS Bhadauria) தலைமை தாங்குவார்.
இந்த மூன்று நாள் மாநாட்டில், தற்போதைய சூழ்நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்வார்கள். அடுத்த தசாப்தத்தில் இந்திய விமான படையின் (IAF) செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் தளபதிகள் விவாதிப்பார்கள்.
ALSO READ | லாக்டவுனால் எந்த பயனும் இல்லை... நாளை முதல் இயல்பு நிலை: BS Yediyurappa
மாநாட்டின் போது ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்களில், ஒன்று சீனாவுடனான எல்லைகளில் உள்ள நிலைமை மற்றும் கிழக்கு லடாக் மற்றும் வடக்கு எல்லைகளில் முன்னணி நிலைகளில், படையினர் நிறுத்தப்பாட்டிருப்பது குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்படும் என IAF வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை இறுதிக்குள் பிரான்சிலிருந்து வரும் ரஃபேல் (Rafale) விமானங்களை விரைவாக இராணுவத்தில் விரைவாக ஈடுபடுத்துவது குறித்து இந்திய விமானப்படை உயர்மட்ட அதிகாரிகள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் போது நாட்டின் விமான பாதுகாப்பு முறை குறித்து விரிவான மறுஆய்வு செய்ய IAF உயர் கமாண்டர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை கருத்தில் கொண்டு லடாக் (Ladakh)பிராந்தியத்தில் ரஃபேல் போர் விமானங்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு
கிழக்கு லடாக்கில் உள்ள முக்கிய எல்லைப்புற IAF தளங்கள் மற்றும் LAC பகுதிகளில் சுகோய் 30 எம்.கே.ஐ, ஜாகுவார், மிராஜ் 2000 (Sukhoi 30 MKI, Jaguar, Mirage 2000) போன்ற அனைத்துஅதி நவீன போர் விமானங்களையும் இந்திய விமானப்படை பயன்படுத்தியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னணி நிலைகளில் துருப்புக்களை விரைவாக கொண்டு செல்ல அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் சினூக் ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படை பயன்படுத்தியுள்ளது.