Bagmati Express: சென்னை அருகே நேற்று வெள்ளிக்கிழமை பெரும் ரயில் விபத்து ஏற்பட்டது. மைசூரு-தர்பங்கா பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது. இதனால் அதில் இருந்த 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் காயமடைந்தனர். பீகாரில் உள்ள தர்பங்கா மற்றும் கர்நாடகாவின் மைசூரு இடையே இந்த ரயில் பயணிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் விபத்து நடைபெற்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் சிக்கிய பயணிகளுக்கு உடனடியாக உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?
அனைவரும் தங்கள் பயணத்தைத் தொடர உதவும் வகையில், சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அதிகாலையில் புறப்பட்டது. மைசூரிலிருந்து தர்பங்கா செல்லும் பாகுமதி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில, மைசூரில் இருந்து தர்பங்கா செல்லும் பல ரயில் வழக்கம் போல் இயங்கவில்லை. இந்த எதிர்பாராத விபத்து காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது வெவ்வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறித்த தகவலை தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகள் இந்த புதிய ரயில் நேரங்களைச் சரிபார்த்து, தங்கள் பயணங்களுக்கான திட்டங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Bulletin No. 04- SCR PR No. 515 Dt. 12.10.2024 Cancellation/ Diversion of Trains pic.twitter.com/v4kDjklykT
— South Central Railway (@SCRailwayIndia) October 12, 2024
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
ரயில் எண் 16111: திருப்பதி - புதுச்சேரி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 16112: புதுச்சேரி - திருப்பதி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 16203: சென்னை சென்ட்ரல் - திருப்பதி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 16204: திருப்பதி - சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 16053: சென்னை சென்ட்ரல் - திருப்பதி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண்: 16054 திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில் ரத்து.
ரயில் எண். 16057: சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 16058: திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் ரத்து.
ரயில் எண். 06401: அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 06402: கடப்பாவிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 06727: சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 06728: திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில் ரத்து.
ரயில் எண். 06753: அரக்கோணம் முதல் திருப்பதி செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 06754: திருப்பதி முதல் அரக்கோணம் செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 12711: விஜயவாடா முதல் சென்னை சென்ட்ரல் வரும் ரயில் ரத்து.
ரயில் எண். 12712: சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா வரை செல்லும் ரயில் ரத்து.
ரயில் எண். 06746: நெல்லூர் முதல் சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் ரத்து.
#WATCH | Tamil Nadu: Drone visuals from Chennai-Guddur section between Ponneri- Kavarappettai railway stations (46 km from Chennai) of Chennai Division where Train no. 12578 Mysuru-Darbhanga Express had a rear collision with a goods train, yesterday evening.
12-13 coaches of… pic.twitter.com/QnKmyiSVY7
— ANI (@ANI) October 12, 2024
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ