ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழா: பிரபலங்கள் பங்கேற்பு!

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Last Updated : Jun 29, 2018, 09:32 AM IST
ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழா: பிரபலங்கள் பங்கேற்பு! title=

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

முகேஷ் மற்றும் நீடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவிற்கு நேற்று நிச்சயதார்த்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாரூக்கான், கௌரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி, கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆகாஷ் அம்பானிக்கு கல்லுரியில் படிக்கையில் ஷ்லோகா மேத்தாவை காதலித்தார். இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஷ்லோகாவுடன் காதல் கொண்ட ஆகாஷ் கடந்த மார்ச் மாதம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஷ்லோகா, ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஆவார். 

முன்னதாக இவர்களது திருமண அழைப்பிதழ் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டது. பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று நடந்த ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர். மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

 

Trending News