அகமதாபாத் நகராட்சி தேர்தல்: பிரதமர் மோடியின் அண்ணன் மகளுக்கு டிக்கெட் மறுப்பு

அகமதாபாத் நகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது, ஆனால் வேட்பாளர் பட்டியலில் சோனல் மோடியின் பெயர் இல்லை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 5, 2021, 05:13 PM IST
  • சோனல் மோடி, ஏ.எம்.சியின் போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட பாஜக டிக்கெட்டை கோரியதாக தெரிவித்திருந்தார்.
  • சோனல் மோடி, பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடியின் மகள்.
  • இவர் நியாய விலைக் கடை வைத்திருக்கிறார், குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
அகமதாபாத் நகராட்சி தேர்தல்: பிரதமர் மோடியின் அண்ணன் மகளுக்கு டிக்கெட் மறுப்பு title=

அகமதாபாத் நகராட்சி தேர்தலில் பாகக சார்பாக போட்டியிட பாஜக வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடியின் மருமகள் சோனல் மோடியின் மனுவை, வேட்பாளர்களுக்கான புதிய விதிகளை மேற்கோள் காட்டி கட்சி டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டது
அகமதாபாத் நகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது, ஆனால் வேட்பாளர் பட்டியலில் சோனல் மோடியின் பெயர் இல்லை.

செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய சோனல் மோடி, ஏ.எம்.சியின் போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட பாஜக டிக்கெட்டை கோரியதாக தெரிவித்திருந்தார்.

சோனல் மோடி, பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடியின் மகள், இவர் நகரத்தில் நியாய விலைக் கடை வைத்திருக்கிறார், குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

குஜராத் பாஜக (BJP) சமீபத்தில் கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படாது என்று அறிவித்தது. விதிகள் அனைவருக்கும் பொதுவானது எனக் கூறி, அவருக்கு டிக்கெட் மறுக்கப்படிருக்கிறது
எனினும், சோனல் மோடி பிரதமரின் மருமகளாக அல்லாமல் பாஜக தொண்டராகத் தான்  தேர்தல்  போட்டியிட வேண்டும் என மனுவை தாக்கல் செய்தேன் என அவர் கூறினார். எனினும் தான் தொண்டர்ந்து அர்பணிப்புடன் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றினேன் என அவர் கூறியுள்ளார். 

"என் குடும்பம் நரேந்திர மோடியின் பெயரை எங்கள் நலனுக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லை. நாங்கள் அனைவரும் எங்கள் சொந்த கால்களில் நின்று குடும்பத்தை பராமரிக்கிறோம்” என பிரதமர் மோடியின் சகோதரரான பிரஹ்லாத் மோடி கூறினார்.

அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும்  576 பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 1 ம் தேதி, ஆளும் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு டிக்கெட் வழங்க ப்பட மாட்டாது என்று பாஜக கூறியிருந்தது.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட கட்சி தொண்டர்களுக்கு, மூன்று முறை பதவி வகித்தவர்களுக்கும்  கவுன்சிலர் பதவியில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று பாஜக கூறியிருந்தது.

ALSO READ | ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர் : நரேந்திர சிங் தொமர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News