கங்கை கால்வாய் மூடல்.... Delhi-NCR தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கக்க்கூடும்..!!!

2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஹரித்வார் கும்பமேளா முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கங்கை கால்வாய் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 01:28 PM IST
  • கங்கை கால்வாய் மூடப்படுவது மேற்கு உத்தரபிரதேசத்தில் பாசனத்தை பாதிக்கும்.
  • ஹரித்வாரில் வரவிருக்கும் கும்பமேளாவை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற உத்தரகண்ட் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
  • ஆன்மீக சுற்றுலா என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால் இது மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.
கங்கை கால்வாய் மூடல்.... Delhi-NCR தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கக்க்கூடும்..!!! title=

கங்கை நதி கால்வாயை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அதிகாரிகள் வியாழக்கிழமை மூடியுள்ளதால், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வரவிருக்கும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கங்கா கால்வாயை மூடுவது மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளும் நீர்ப்பாசனத்தையும் பாதிக்கும். டெல்லி-என்.சி.ஆர் (தேசிய தலைநகர் வலைய பகுதி) நீர் விநியோகத்தையும் பாதிக்கும்.

2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஹரித்வார் கும்பமேளா முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கங்கை கால்வாய் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 15 ஆம் தேதி கங்கை கால்வாயிலிருந்து செய்யப்படும் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு அக்டோபர் 17 முதல் நீர் சப்ளை சிக்கலை எதிர்கொள்ளத் தொடங்கலாம்.

கங்கை கால்வாயை ஒவ்வொரு ஆண்டும் நீர்ப்பாசனத் துறையால் நவராத்திரி மற்றும் தீபாவளி நேரத்தில் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு ஹரித்வாரில் கும்பமேளா தொடங்குவதற்கு முன்னதாக பல பாலங்கள் கட்டப்பட வேண்டும்.

கங்கா கால்வாய் நீர் பிரதாப் விஹார் கங்கை நீர் ஆலையில் இருந்து நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம், வைஷாலி, வசுந்தரா, கோடா ஆகியவற்றுக்கு இங்கிருந்து நீர் செல்கிறது; மற்றும் நொய்டாவில் செக்டர் 62, 8, 9, 10, 11 உட்பட பல செக்டார்களுக்கு தண்ணீர் சப்ளை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | கொரோனா பரிசோதனையில் இந்தியாவின் 'FELUDA' ஒரு Game Changer ஆக இருக்குமா..!!!

ஹரித்வாரில் வரவிருக்கும் கும்பமேளாவை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற உத்தரகண்ட் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆன்மீக சுற்றுலா என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால் இது மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

COVID-19 தொற்றுநோயால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனை அடுத்து, ஏற்கனவே மாநிலத்தின் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா 2021 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற உள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பிரயாகராஜில் ஒரு பிரமாண்டமான கும்பமேளையை ஏற்பாடு செய்தது, அங்கு கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினர். பிரயாகராஜில் கும்பமேளா 2019 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று நிறைவடைந்தது.

ALSO READ | Paytm Wallet தொடர்பாக மாற்றப்பட்டுள்ள முக்கிய விதியின் விபரம் உள்ளே..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News