புதுடெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7 (சனிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.
பீகாரின் வளர்ச்சிக்கு நிதீஷ் குமார் (Nitish Kumar) தலைமையிலான அரசு தேவை என கூறியுள்ளார். "நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று மோடி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது கடிதத்தில், பீகாரின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்களை சரிவர செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
பீகார் தேர்தலில், மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பிகாரின் கனவுகள் சிதைந்து விடும் என பிரதமர் மொடி குறிப்பிட்டுள்ளார்.
பீகாரின் ஒட்டு மொத்த வளர்ச்சியை விரும்பும் நிதீஷ் குமார் ஆட்சிக்கு வந்தால், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் தோளோடு தோள் தொடுத்து பணியாற்றி, திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.
மேலும் படிக்க | கர்தார்பூர் குருத்வாரா கட்டுப்பட்டை ISI வசம் ஒப்படைத்துள்ள பாகிஸ்தான்..!!!
மூன்றாம் கட்ட வாக்களிப்புக்கு தயாராகி வரும் பீகார் (Bihar) மக்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு தர வேண்டும் என கோரியுள்ளார்.
பிரதமர் மோடி, மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில், அராரியா, சஹஸ்ரா ஆகிய இடங்களில் நடந்த பேரணிகளில் உரையாற்றினார். பிகார் தேர்தலுக்காக பிரதமர் 12 பேரணிகளில் உரையாற்றியுள்ளார்.
பிரதமரை தவிர, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) , பாஜக தலைவர் ஜேபி நட்டா (JP Nadda) , உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி அதித்யநாத் (Yogi Adityanath) ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | COVID-19: இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை விதித்த சீனா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR