வருகிற 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக திட்டங்கள் வகுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின் போது -நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் விவசாயம் தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார்.
>ஏழைகளுக்கான இலவச சிலிண்டர் இணைப்புத் திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும்
>ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு
>கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு
>பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்
>கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு.
>நாடு முழுவதும் தரமான கல்வி வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி
>பள்ளிகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு டிஜிட்டல் போர்டுகள் அமைப்பு
>வேளாண் சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு
>4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு
>கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழுக் கவனம் செலுத்தி வருகிறது. கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு
>பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகலவ்யா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும். குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம்
>இரண்டு கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் கட்டப்படும்
>விளை பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்
>10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீட்டு திட்டம்.
>கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளுக்காக ரூ.16,713 கோடி ரூபாய் ஒதுக்கீடு
>மூன்று நாடாளுன்ற தொகுதிக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 500 வழங்கப்படும்
நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிபாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது உள்ளிட்ட பல விசாயிகளின் அம்சங்களை வாசித்தார்.