ஏர் இந்தியாவுக்குப் பிறகு, இந்த நஷ்டத்தில் இயங்கும் இப்போது டாடா குழுமம் இந்த நஷ்டத்தில் NINLஅரசு நிறுவனத்தை வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், நாட்டின் மிகவும் பிரபமான முன்னணி தொழில்துறை குழுமமான டாடா குழுமம், அரசு நடத்தும் ஏர் இந்தியாவை கையகப்படுத்தியது. இதன் காரணமாக அரசாங்கமும் பெரும் தொகையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஏர் இந்தியாவுக்குப் பிறகு, டாடா குழுமம் மற்றொரு அரசு நிறுவனமான நிலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட் (NINL) என்ற நிறுவனத்தையும் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா ஸ்டீஸ்
உண்மையில், இந்த NINL நிறுவனத்தை டாடா குழும நிறுவனமான டாடா ஸ்டீல் கையகப்படுத்தும் என்று ஒரு தகவல் வந்துள்ளது. டாடா ஸ்டீல் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநர் (எம்டி) டிவி நரேந்திரன் இது குறித்து கூறுகையில், ஜூன் மாத இறுதிக்குள் நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட் (என்ஐஎன்எல்) நிறுவனத்தை கையகப்படுத்தும் என்றார்.
மேலும் படிக்க | டாடா நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி: ஏப்ரல் முதல் உயர்கின்றன விலைகள்
என்ஐஎன்எல்லின் இந்த கையகப்படுத்தல் டாடா ஸ்டீலுக்கு ஒரு பெரிய தயாரிப்பு வளாகத்தை உருவாக்கும் நோக்கில் மிகவும் முக்கியமானது. நரேந்திரன் கூறுகையில், "நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் என்ஐஎன்எல்-ஐ கையகப்படுத்துவது நிறைவடையும், மேலும் எங்களின் உயர் மதிப்பு சில்லறை வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் இதை விரைவுபடுத்துவோம்" என்றார். குறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி 31 அன்று, ஒடிசாவை தளமாகக் கொண்ட எஃகு தயாரிப்பு நிறுவனமான NINL நிறுவனத்தின் 93.71 சதவீத பங்குகளை ரூ.12,100 கோடிக்கு வாங்குவதற்கான ஏலத்தில் வெற்றி பெற்றதாக டாடா ஸ்டீல் அறிவித்தது.
பெரும் நஷ்டத்தில் இயங்கும் NINL நிறுவனம்
டாடா குழுமம் வாங்க திட்டமிட்டுள்ள நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட், ஒடிசாவில் கலிங்காநகரில் அமைந்துள்ள 1.1 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஒருங்கிணைந்த எஃகு ஆலை. இந்த அரசு நிறுவனமும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் ஆலை கொரோனா தொடங்கியதில் இருந்து, அதாவது 2020 மார்ச் 30 முதல் மூடப்பட்டுள்ளது. மார்ச் 31, 2021 நிலவரப்படி நிறுவனம் ரூ. 6,600 கோடிக்கும் அதிகமான கடன்களை கொண்டுள்ளது. இதில் விளம்பரதாரர்களுக்கு ரூ. 4,116 கோடி, வங்கிகள், பிற கடனாளிகளுக்கு ரூ.1,741 கோடி மற்றும் ஊழியர்களின் பெரும் பாக்கிகள் அடங்கும்.
இந்த நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கினாலும், என்ஐஎன்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பழையபடி நிறுவனத்திலேயே இருப்பார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நிறுவனம் ஒரு வருடத்திற்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் 18000 கோடிக்கு ஏலத்தில் ஏர் இந்தியாவை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஏர் இந்தியா சேவையை உலகத்தரம் வாய்ந்ததாக ஆக்குவோம்: டாடா குழுமம்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR