மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் மறுநாள் காலை விடியல் ஒரு பேரழிவாக இருக்கும் என அங்குள்ள யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். 1984 டிசம்பர் 3, விடியும் போது, அந்த நள்ளிரவில் தூங்க போன பலர் எழுந்திருக்கவேயில்லை.
யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. இந்த விஷ வயு கசிவில் சுமார் 150,000 பேர் ஊனமுற்றனர், 22,000 பேர் இறந்தனர். போபால் விஷவாயு கசிவு, உலகின் தொழில்துறை வரலாற்றில் நடந்த மிகப்பெரிய விபத்து ஆகும்.
போபாலி (Bhopal)விஷ வாயு கசிவு ஏற்பட்ட அந்த நாளில், சுற்றிலும் ஒரே புகையாக இருந்தது. எந்த வழியில் தப்பித்து ஓட வேண்டும் என்று மக்களுக்குத் தெரியவில்லை, அவர்கள் மூச்சுத் திணறலால் இறந்து கொண்டிருந்தார்கள்.
விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குள் 3000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என அரசாங்க புள்ளிவிவரங்கள் கூறுகின்றனர். ஆனால் ஆலையில் பணிபுரிந்த, மற்றும் நேரில் கண்ட சாட்சிகளும் கூறும் எண்ணிக்கையை பார்த்தால், இறந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு. இது ஒரு இரவில் மட்டும் ஏற்பட்ட இழப்பு. அதன் பின்னரும் இறப்புகள் தொடர்ந்து ஏற்பட்டன. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ | இந்தியாவின் மர்ம ஏரி.. இது வரை இங்கு போனவர்கள் திரும்பியதில்லை..!!!
இந்த விஷவாயு கசிவின் பாதிப்பு பல ஆண்டுகளாக தொடர்கின்றது. டிசம்பர் 2ம் தேதி அன்றிரவு யூனியன் கார்பைட்டின் தொழிற்சாலையில் இருந்து சுமார் 40 டன் விஷவாயு கசிந்தது. ஆலையில் இருந்த தொட்டி எண் 610 இல் உள்ள நச்சு, மீதில் ஐசோசயனேட் வாயு தண்ணீரில் கலந்ததாக கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வேதியியல் செயல்முறையின் காரணமாக, தொட்டியில் அழுத்தம் உருவாக்கப்பட்டு, தொட்டி வெடித்து, அதிலிருந்து வந்த வாயு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது.
மத்திய பிரதேசத்தின் (Madya Pradesh) தலைநகரான போபாலில், இந்த விஷவாயுகசிவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள சேரியில் வசிக்கும் மக்கள், வாழ்வாதாரத்தைத் தேடி தொலைதூர கிராமங்களிலிருந்து வந்தவர்கள். இந்த கசிவு காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போனது மட்டுமல்ல. லட்சக்கணக்கான மக்கள் நிரந்தரமாக ஊனமாகி முடக்கப்பட்டனர், இது இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர். அந்த இரவின் பல கதைகள் இன்றும் மக்களின் நினைவில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பெருந்திரளாக கண்களில் கண்களில் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் என மருத்துவமனையை அடைந்தபோது இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. நகரத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இடம் இல்லை.
முதல் இரண்டு நாட்களில் சுமார் 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், மெத்தில் ஐசோசயனேட் வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் அனுபவம் இல்லாததால் என்ன செய்வது என்று மருத்துவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.
போபால் நகரம் இன்னும் அதிலிருந்து மீளவில்லை. 1984 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விஷ வாயுவுக்கு பிறகு, அடல் அயூப் நகரின் கை பம்பின் நீர் 1999 வரை விஷமாக இருந்தது. இதில் ஏழு மடங்கு அதிக விஷம் இருந்ததாக கூறப்படுகின்றன. விஷ வாயுவின் பக்க விளைவுகள் மிக மோசமானதாகவும், மிக அதிகமாகவும் இருந்தன, இன்று கூட அங்கு பிறக்கும் புற்று நோயுடனும், உடல் ஊனமாகவும் குழந்தைகள் பிறக்கின்றனர்.
ALSO READ | விண்வெளியில் கழிவறை அமைக்கும் NASA... அதற்கான செலவு வெறும் 8700 கோடி தான்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR