மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்!!

மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்!!

Last Updated : Mar 22, 2019, 02:17 PM IST
மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்!!   title=

மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்!!

மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் கர்நாடகாவிலிருந்து நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை சுமலதா ஆகிய இருவரும் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக தீவிர அரசியல் பேசி வருகிறார். பேசுவது மட்டுமில்லாமல் தேர்தல் களத்திலும் இறங்க முடிவெடுத்துள்ளதாக அவர் அறிவித்திருந்தார். 

நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்தத் தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். 

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயோச்சையாகப் போட்டியிட  நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (மார்ச் 22) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சுமலதா, பிரகாஷ்ராஜ் இருவரும் சுயேச்சையாக வெற்றி பெற்றால் 52 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவிலிருந்து சுயேச்சையாக மக்களவைக்கு செல்பவர்கள் என்ற பெருமையைப் பெறுவார்களாம். 

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி டி மூர்த்தி புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 12 ஆம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அது விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் புகாரளிக்கப்பட்டுள்ளது. அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என்கிறார் தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி. இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் விரைவில் விசாரிக்கும் என்று தெரிகிறது.

 

Trending News