அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா உறுதியானது....

மாநிலத்தில் ஏழு புதிய கோவிட் -19 நேர்மறை வழக்குகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் கேரளாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

Last Updated : May 10, 2020, 07:57 PM IST
அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா உறுதியானது.... title=

மாநிலத்தில் ஏழு புதிய கோவிட் -19 நேர்மறை வழக்குகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் கேரளாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பதிவாகியுள்ள ஏழு புதிய நேர்மறையான வழக்குகளில், இரண்டு திருச்சூரில் இருந்தும், ஒன்று மலப்புரத்தில் இருந்தும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவர்கள் மூவரும் கடந்த மே 7 அன்று அபுதாபியிலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருந்து இந்திய குடிமக்களை ஏற்றி வந்த முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை இரவு கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது, கோவிட் -19 தொற்றுநோயால் சர்வதேச பயண பூட்டுதலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தனது நாட்டினரை திருப்பி கொண்டுவரும் முயற்சியில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் 181 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX452 வியாழக்கிழமை இரவு 10.09 மணிக்கு கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் (சியால்) தரையிறங்கியது. 181 பயணிகளில் 49 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நான்கு கைக்குழந்தைகள் அடங்குவர்.

முன்னதாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை விற்கும் கடைகளுக்கு விலக்கு அளிக்கும் அதே வேளையில், "ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் மொத்தமாக மூடப்படுவது" குறித்து இடது அரசாங்கம் சனிக்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்திருந்தது.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தமாக பணிநிறுத்தம் செய்ய மாநில அரசின் உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், இன்று காலை முதல் கேரளா சாலைகள் வெறிச்சோடிகிடந்தன.

பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்த்து, மாநிலம் முழுவதும் சாலைகள் காலியாக இருந்தன, கடைகள் மூடப்பட்டன.

முன்னதாக வெள்ளியன்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், மாநிலத்தில் கொரோனா தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவித்திருந்தார். எனினும் மாநிலத்திற்கு தற்போது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் சொந்த மண் திரும்பும் நிலையில் தற்போது மாநிலத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Trending News