சமூக நலத்திட்டங்களில் ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பது மூலம், நலத்திட்டங்கள் சரியான நபருக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியும். மேலும் சமூகநல திட்டங்களுக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை கால அவகாசம் மத்திய அரசு வழங்கியுள்ளது.
எனவே சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கும் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கூறினார்கள்.
மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.