மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து... பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்..!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 17, 2024, 10:59 AM IST
மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து... பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்..!! title=

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சீல்டாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், மோதல் காரணமாக காஞ்சன்ஜங்கா ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. எனினும் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி, X தளத்தில் இந்த விபத்து பற்றி பேசுகையில், தனது பதிவில், "டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிதேவா பகுதியில் நடந்த ஒரு சோகமான ரயில் விபத்து பற்றி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து குறித்த விரிவான தகவல்  பெற காத்திருக்கிறேன், " என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் மேலிட உத்தரவு - சிதம்பரம்

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிக்னலை தாண்டிய சரக்கு ரயில், காஞ்சன்ஜங்கா ரயிலின் பின்பகுதியில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  NDRF, பிரிவு குழு மற்றும் 15 ஆம்புலன்ஸ்கள் மக்களை மீட்க சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சரும், மாநில அமைச்சரும் அமைச்சகத்தின் வார் ரூமில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் இருவர் பலியாகி இருப்பதாக, உறுதி படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதிய வேகத்தில், ரயிலின் பெட்டிகள் சரக்கு ரயிலின் என்ஜினுக்கு மேல் சென்றன. இந்த விபத்தையடுத்து பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பலத்த அலறல் சத்தம் எங்கும் கேட்டது. இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி! திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி முழக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News