ஹைதராபாதில் எருது திருட்டு வழக்கில் 8 பேர் கைது!

திருடப்பட்ட எருதுகளை உ.பி மாநிலத்திற்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்துவிடுவர்...

Last Updated : Dec 29, 2017, 12:01 PM IST
ஹைதராபாதில் எருது திருட்டு வழக்கில் 8 பேர் கைது! title=

ஹைதராபாதில் இன்று காலை, எருதுகள் திருட்டு வழக்கில் 8 பேர் கொண்ட கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது. மேலும் இவர்களிடம் இருந்து 60 எருதுகள் மீட்கப்பட்டன!

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், குற்றம்சாட்டப் பட்வர்கள் திருட்டு செயலில் ஈடுபடும் போது, அவர்கள் திட்டமிட்டு எருது உரிமையாளர்களை குறிவைத்து தாக்கி அவரிடம் இருந்து எருதுகளை திருடிச்சென்றுள்ளனர். 

பின்னர் திருடப்பட்ட எருதுகளை உ.பி மாநிலத்திற்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்துவிடுவர் எனவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட எருதுகள் உரிமையாளிரடம் ஒப்படைப்பதாற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!

Trending News