திருவனந்தபுரத்தின் புயலிலிருந்து 59 பேர் மீட்பு!

திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் ஒகி புயலிலிருந்து 59 பேர் மீட்கப்பட்டனர்.  

Last Updated : Dec 1, 2017, 02:37 PM IST
திருவனந்தபுரத்தின் புயலிலிருந்து 59 பேர் மீட்பு!  title=

மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி, காசர்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, விதுரா ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களவே மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவ மழையானது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி. கடந்த புதன் அன்று திருவனந்தபுரத்தை ஒகி புயல் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடுமையாக  மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மழை சற்று கடுமையாக இருந்து வந்ததால் மழைக்குப் பின் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு வறட்சி நீங்கி நீர்நிலைககளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. 

இதை தொடர்ந்து, தற்போது ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 59 பேர் நபர்கள் ஒகி புயலிலிருந்து மீட்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News