பெங்களூரு: கர்நாடகாவில் (Karnataka), ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற காய்கறி விற்பனையாளரை போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தினர். பின்னர் அவர்கள் அளித்த சலானில் இருந்த தொகையைப் பார்த்து அவர் மயங்கி விழாத குறையாக ஆடிப்போனார்.
ஸ்கூட்டரின் விலையை விட அதிகமான அபராதத்தை (Fine) விதித்து போலீஸ் அவரிடம் சலானை அளித்தது. கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மீட்டர் நீளமுள்ள அபராத சலான்
ஹெல்மெட் அணியாததால் அவரை வெள்ளிக்கிழமை போக்குவரத்து போலீசார் (Traffic-Police) தடுத்து நிறுத்தியதாக மடிவாலாவில் வசிக்கும் அருண்குமார் தெரிவித்தார். ஆனால் இரண்டு மீட்டர் நீளமான சலானைக் கண்டதும் அவர் கதிகலங்கிப் போனார்.
அவருக்கு ரூ .42,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் தனது பழைய ஸ்கூட்டருக்கு தான் அளித்த தொகையை விட அதிகம் என்று அருண் கூறினார்.
ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்
மாடிவாலா போலீசின் கூற்றுப்படி, அருண்குமார் 77 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இதற்காக அவர் இப்போது 42,500 ரூபாய் என்ற சலான் தொகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அவரது ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போக்குவரத்துத் துறையிலிருந்து இந்த பதிலைப் பெற்ற பிறகு, அருண்குமார் பணத்தை ஏற்பாடு செய்து நீதிமன்றத்தில் செலுத்த சிறிது நேரம் கேட்டுள்ளார்.
ஹெல்மெட் (Helmet) அணிவது வாகனத்தில் பயணிப்பவர்களின் நன்மைக்கே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உயிர் காக்கும் கேடயமாக மாறக்கூடிய ஒரு விஷயத்தில் இப்படிப்பட்ட கவனக்குறைவு இருப்பது நல்லதல்ல. அதிக அபராதங்கள் விதிக்கப்படுவதும் மக்கள் இந்தத் தவறுகளை செய்யாமல் தடுக்கவும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்தான்!!
ALSO READ: இனி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்.. மீறினால் கடும் நடவடிக்கை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR