2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்ததான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை போலீசார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை அணியின் அரவிந்த் டி சில்வா, சங்கக்காராவிடம் இலங்கை காவல்துறையின் விளையாட்டு விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
Also Read | கொரோனா: 100 வயதான மூதாட்டியின் உற்சாகம் கொடுக்கும் உத்வேகமும் நம்பிக்கையும்
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. 275 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானர் (DUCK OUT). சச்சின் 18 ரன்களில் அவுட்டானார் என்றாலும், கெளதம் கம்பீர் சிறப்பாக ஆடி 97 ரன்கள் எடுத்தார். விராட் கோஹ்லி 35 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் மகேந்திர சிங் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 91 ரன்கள் எடுத்தார். அவர் அடித்த சிக்ஸரே இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கான தெரிவுக்குழு தலைவருமான அரவிந்த டி சில்வாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில், இந்திய அணி வெற்றி பெறுவதற்காக இலங்கை விட்டுக் கொடுத்ததாக இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.
Read Also | வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, அலி ஃபசல் ஆகியோர் அளித்த நன்கொடை
இது தொடர்பாக தன்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை போலீஸின் விளையாட்டு விசாரணை பிரிவிடம் ஒப்படைத்திருந்தார்.
இதன் அடிப்படியில் தொடங்கப்பட்ட விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்து கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் என்ற குற்றச்சாட்டு உண்மையாகுமா அல்லது இதில் வேறு எதாவது உள்விவகாரங்கள் இருகின்றனவா என்பது போன்ற திடுக்கிடும் விஷயங்கள் வெளிப்படலாம்.
சில கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டாலும், அதுதொடர்பான விஷயங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.