நிஃபா, கொரோனா, ஜிகா, தக்காளிக் காய்ச்சல் என கேரளாவில் அடுத்தடுத்து வைரஸ் தாக்குதல்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட பிறகே அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
நோரோ வைரஸ் கேரளாவிற்கு புதிது அல்ல. முன்னதாக, கடந்த ஆண்டு பூக்கோடு கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 13 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வைரஸ் சுகாதாரமற்ற தண்ணீரின் மூலம் பரவுகிறது. இந்த தொற்று ஏற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் தோன்றும். இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக் கூடியது ஆகும்.
மேலும் படிக்க | கேரளாவில் வேகமாகப் பரவும் தக்காளி காய்ச்சல்...80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு
தொற்று ஏற்பட்ட குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நோரோ வைரஸ் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் உயிர்வாழக் கூடியது என்பதால் வேகவைத்த உணவுகளை உண்பதோ, குளோரின் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவதோ வைரசைக் கொல்லாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால், கைகளை அடிக்கடி கழுவுவதே தொற்றில் இருந்து காத்துக்கொள்வதற்கான வழி எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | தக்காளி வைரஸ்? தக்காளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை: ராதாகிருஷ்ணன் விளக்கம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR