தெலுங்கானா தேர்தல்: பாஐக சார்பில் 2 இஸ்லாமியர்கள் போட்டி!

வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் 6 பெண்கள் உட்பட 2 இஸ்லாமியர்கள் போட்டியிடுகின்றனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2018, 02:58 PM IST
தெலுங்கானா தேர்தல்: பாஐக சார்பில் 2 இஸ்லாமியர்கள் போட்டி! title=

வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் 6 பெண்கள் உட்பட 2 இஸ்லாமியர்கள் போட்டியிடுகின்றனர்!

வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலினை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 28 வேட்பாளர்கள் பெயர் கொண்ட இந்த இரண்டாவது பட்டியலில் 2 இஸ்லாமிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள இந்த பட்டியலின்படி முன்னாள் MLA-க்கள் - பதாம் பால் ரெட்டி(ராஜேந்திரநகர் தொகுதி), எம்.தர்மராவ் (வாரங்கல்-மேற்கு தொகுதி) மற்றும் யன்டாண் லக்ஷ்மி நாராயாணன் (நிசாம்பாத் தொகுதி) ஆகியோருக்கு மீண்டும் MLA ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது

கடந்த வாரம் பிஜேபியில் சேர்ந்த பிரபல ஜெனரல் ஜி யோகானந்த், ஹைதராபாத்தில் செரிங்கிம்பள்ளி தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான தாவூத் அலி நரேந்திராவின் மகன் அலே ஜீதந்திரா மலாக்காபேட் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகின்றார்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் 5 பழங்குடியினர், 2 பட்டியல் இனத்தவர், மற்றும் 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் திருமதி சையத் ஷாசாடி சந்திராயுங்காத்தாவில் MIM தலைவர் அக்பருதீன் ஒவாசி-யை எதிர்த்து போட்டியிடுகின்றார். மற்றொரு இஸ்லாமிய வேட்பாளர் ஹனீஃப் அலி பஹதூர்பூரா தொகுதியில் போட்டியிடுகின்றார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 20-ஆம் நாள் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் 38 வேட்பாளர் பெயர் இடம்பெற்று இருந்தது. இந்த பட்டியலில் மூன்று பெண்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

119 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா சட்டபேரவைக்கு இதுவரை பாஜக 66 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முன்னாதக கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக தற்போது அம்மாநிலத்தில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது!

Trending News