தொடை கொழுப்பை எரிக்கும்... சில சூப்பர் யோகாசனங்கள்!

Yoga Asanas to Burn Thigh Fat: உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், தொப்பை கொழுப்பு பிரச்சனை ஒரு பக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், தொடை கொழுப்பும் சிலருக்கு அதிகமாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2024, 06:37 PM IST
  • தொடை கொழுப்பை எரிக்க உதவும் யோகா பயிற்சிகள்.
  • தொடையில் உள்ள தசைகள் வலுப்பெற்று கொழுப்பு எரிக்கப்படும்.
  • கால் தசைகள் வலுவடைந்து, காலில் கால ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
தொடை கொழுப்பை எரிக்கும்... சில சூப்பர் யோகாசனங்கள்! title=

Yoga Asanas to Burn Thigh Fat: உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், தொப்பை கொழுப்பு பிரச்சனை ஒரு பக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், தொடை கொழுப்பும் சிலருக்கு அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது தொடை பகுதியில் உள்ள கொழுப்பை எரிக்க சில யோகாசனங்கள் உதவும். உடல் எடையை குறைக்க, யோகாசனங்கள் சிறந்த உத்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது. யோகாசனங்கள் கொழுப்பை மட்டும் எரிப்பதில்லை, நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து தசைகளுக்கு வலுக்கூட்டி கலோரிகளை எரிக்க உதவுகிறது. இந்நிலையில் தொடை கொழுப்பை எரிக்க உதவும் யோகா பயிற்சிகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தொடை கொழுப்பை எரிக்க உதவும் யோகா பயிற்சிகள்

உத்கடாசனம் (Utkatasana)

வுட் கட்டாசனம் என்பது அமர்ந்திருப்பது போன்ற இலையைக் கொண்டு ஆசனம் ஆகும். இதன் மூலம் கால், இடுப்பு தொடையின் தசைகள். நாற்காலியில் உட்காருவது மிகவும் எளிது. ஆனால் நாற்காலியில் உட்காருவது போன்று பயிற்சி செய்வது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு எளிதல்ல. அதே நிலையில் சில வினாடிகள் நீடித்திருக்கும் போது, தொடை கால்களில் அதன் தாக்கத்தை உணரலாம். முக்கியமாக, தொடைகள் மற்றும் இடத்தில் அதன் தாக்கம் தெரியும். இதனால் தொடைகள் வலுவடைந்து, சிக்கென்ற தோற்றத்தை (Weight Loss Tips) பெறும்.

வீரபத்ராசனம் (Virabhadrasana)

வீரபத்ராசனம் என்பது, ஒரு வீரனைப் போல, கால்களை பரப்பி வைத்துக் கொண்டு, கைகளையும் இருபுறமும் நீட்டி செய்யும் ஆசனம் ஆகும். ஒரு காலின் முழங்கால் மடிந்த நிலையில் இருக்க, ஒரு காலை பின்னோக்கி பரத்தி வைத்து நிற்கும் நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்தினால், தொடை தசைகள் வலுவாகும். கால்களை ஊன்றி கொண்டு, முழங்காலை மடக்கி, இன்னொரு காலை பின்னுக்கு கொண்டு சென்று, கால் விரல்களை பதிய வைத்து, நிற்கும் போது, தொடைகளில் அதன் தாக்கத்தை உணரலாம். இதனால், தொடையில் உள்ள தசைகள் வலுப்பெற்று கொழுப்பு எரிக்கப்படும்.

நடராஜாசனம் (Natarajasana)

பார்க்க அழகான தோற்றத்தைக் கொடுக்கும் இந்த ஆசனம் கைகளுக்கு மட்டும் அல்லாது இடுப்பிற்கான சிறந்த பயிற்சி. ஒரு காலில் உடலை பேலன்ஸ் செய்த படி மறுகாலை பின்னால் கொண்டு சென்று தூக்கி, அதனை கைகளால் பிடித்துக் கொண்டு செய்யப்படும் ஆசனம், உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சி அளிக்கிறது.

மேலும் படிக்க | Brain health: உங்கள் சுட்டிக் குழந்தை... எல்லாவற்றிலும் வல்லவனாக இருக்க..!!

உபவிஷ்ட கோணாசனம் (Upavistha Konasana)

கால்களைப் பரத்திய நிலையில் கைகளை நீட்டி செய்யப்படும் இந்த ஆசனம் பெண்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த ஆசனம். தண்டாசன நிலையில் கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை எந்த அளவிற்கு பரப்பி வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு பரப்பி வைத்துக் கொண்டு. பின்னர் கைகளையும் பரப்பி வைத்துக் கொண்டு செய்யும் ஆசனம் தொடை கொழுப்பை எரிக்க மிகச் சிறந்தது.

ஜானு சிராசனம் (Janu Sirsasana)

ஜான்சிராசனத்தில் ஒரு காலை மடக்கி வைத்துக் கொண்டு மற்றொரு காலை நீட்டி வைத்துக் கொண்டு இரு கைகளால் அதனை குனிந்து பிடித்து செய்யும் ஆசனம் ஆகும். இதனால் தொடை கொழுப்பு எரிவதோடு கால் தசைகள் வலுவடைந்து, காலிர் கால ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

மலாசனம் (Malasana)

மலம் கழிக்கும் போது உட்காரும் நிலையில் செய்யப்படும் ஆசனம் தொடையை வலுப்படுத்தி, தொடை மற்றும் இடுப்பிற்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இந்த நிலையில் உங்கள் இடுப்பு விரிவடையும் அதே நேரத்தில், உங்கள் கால் தசைகள் வலுவாகும்.

மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா? பதில் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News