World Stroke Day: இளமையிலேயே பக்கவாதம் வரக் காரணம் இதுதான்!

உலக பக்கவாத தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மாரடைப்புக்கு அடுத்தபடியாக உயிரை பறிக்கக்கூடிய நோயான பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா?  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2021, 03:08 PM IST
  • உயிர் பறிக்கும் நோய்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பக்கவாதம்
  • மூளைக்கு செல்லும் ரத்தவோட்டம் குறைவதால் பக்கவாதம் ஏற்படுகிறது
  • மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதாலும் பக்கவாதம் ஏற்படும்
World Stroke Day: இளமையிலேயே பக்கவாதம் வரக் காரணம் இதுதான்!   title=

World Stroke Day: இன்று உலக பக்கவாத தினம். உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய்களின் ஒன்றாக இருக்கிறது பக்கவாதம். மாரடைப்புக்கு அடுத்தபடியாக உயிரை பறிக்கக்கூடிய நோயாக பக்கவாதம் இருப்பதால், இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, ரத்தவோட்டம் குறைவதால் மூளையின் பாகங்கள் செயல் இழப்பதை பொதுவாக பக்கவாதம் என்கிறார்கள். மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் கசிவு ஏற்படுவதாலும் பக்கவாதம் ஏற்படுகிறது. 

அதாவது, பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். மூளைக்குப் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது Ischemic stroke என்று அழைக்கப்படுகிறது.   ரத்தக் கொதிப்பினால் மூளைக்குப் போகும் ரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதை Hemorrahagic Stroke என்று அழைக்கின்றனர். 

இன்று இளம் வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தெரிந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.  

Also Read | நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..

மாறிவரும் காலங்களில், ஒவ்வொருவரின் அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது மொபைல். இது அனைவரின் பாக்கெட்டிலும் வாழ்கிறது. மொபைல் திரையில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் ஏற்படும் வாய்ப்பும், ஆயுட்காலம் குறைவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன.

மொபைலைப் பயன்படுத்தும் நேரம்,  டிஜிட்டல் ஸ்கிரீன் டைம் என்று அழைப்பார்கள், அது மூளை பக்கவாதம் போன்ற ஆபத்தான நோயை உண்டாக்கும். மொபைலால் ஏற்படும் பக்கவாதத்திற்கான ஆபத்தை எப்படி குறைக்கலாம்?

பல மணி நேரங்களுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துவதால் இயங்குவதால் பக்கவாதம் வரலாம் என்று ஜேபீ மருத்துவமனையின் (Jaypee Hospital) நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மணீஷ் குப்தா கூறுகிறார். எந்த ஒரு வேலையைச் செய்வதிலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது, அது நமது மூளையில் டோபமைன் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மொபைலைப் பயன்படுத்துவதிலும் இதுவே நடக்கும். முதலில், மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் மொபைல், காலப்போக்கில் நம்மைஅடிமையாகிவிடும், 
அது, நமக்குப் பிடித்த உணவு, குடும்பம் என பிற விஷயங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவை குறைத்துவிடும்.

தினசரி 2 மணிநேரத்தை விட அதிகமாக மொபைல் அல்லது டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் அதிகரிக்கிறது. தற்போது இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.

Also Read | மருக்களை நீக்க எளிய இயற்கையான வழிமுறை

பக்கவாதத்தைத் தடுக்க திரை நேரத்தை எவ்வாறு குறைப்பது? பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகளை டாக்டர் மனீஷ் குப்தா கூறுகிறார்.
 
மொபைலைப் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்திய ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இடையில் 2-5 நிமிடங்களுக்கு நடைபயிற்சி அல்லது கை கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்தால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் உருவாகும் ஆபத்து கணிசமாகக் குறையும். சர்க்கரை நோயும், உடல் எடையும் மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

அடுத்து, படுக்கையில் மொபைல் அல்லது பிற கேஜெட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், மொபைல் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி மூளையின் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கிறது. இந்த ஹார்மோன் தூக்கத்தை குறைக்கும்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மொபைல் அல்லது டிஜிட்டல் திரைகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் டிஜிட்டல் திரையை பயன்படுத்தக்கூடாது. இது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

பக்கவாதம் ஏற்பட்டால், நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து உரிய சிகிச்சை கொடுத்தால் நோயாளியை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர் மனீஷ் கூறுகிறார்.

பக்கவாதம் பாதித்ததும், முதல் 6 மணி நேரம் மிகவும் முக்கியமானது. இதை கோல்டன் டைம் என்று சொல்கின்றனர். இந்த நேரத்தில் நோயாளிக்கு சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால், மூளைக்கு அதிக சேதம் ஏற்படலாம். இதில் 80 சதவீதத்தினர் வாழ்நாள் முழுவதும் முடங்கிப் போகின்றனர். இப்போது மேம்பட்ட மற்றும் புதிய இமேஜிங் தொழில்நுட்பம் காரணமாக, மூளை பக்கவாதம் பாதித்த 24 மணிநேரத்திற்குள் சிகிச்சையை சேதங்களை குறைத்துவிடலாம்.

இந்த தகவல்கள் அனைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை.  

Also Read | மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News