ஆண்களை விட பெண்களின் மூளையில் இளமையாக இருப்பதாக தகவல்!!

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Last Updated : Feb 7, 2019, 05:40 PM IST
ஆண்களை விட பெண்களின் மூளையில் இளமையாக இருப்பதாக தகவல்!! title=

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

மனித மூளையின் வெளிப்பாடு என்னென்று கண்டுபிடிப்பதே மிகக் கடினமான விஷயம். அதில் அடங்கியிருக்கும் ஏராளமான தகவல்களும் நமக்கு கிடைத்துள்ள முடிவுகளை தெரிவிக்கின்றன. 

நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற்கும் நினைவில் வைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் அறிய வந்துள்ளனர்.

எல்லா நினைவுகளும் குறுகியகால நினைவுகளாக தொடங்கி, நீண்டகால நினைவுகளாக மெதுவாக மாறிவிடுவதாக இதுவரை எண்ணப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கிடைத்திருக்கிற கண்டுபிடிப்புகள் ஆச்சரியமூட்டுபவை என நிபுணர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இது சிறப்பானதாகவும், ஏற்றுகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை நினைவில் வைத்து கொள்வதில் மூளையின் முன் மற்றும் பின் பகுதி இரண்டு பாகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அந்த ஆய்வில், 20 வயது முதல் 80 வயதுடையோருக்கான இந்த ஆய்வில் 121 பெண்களும், 84 ஆண்களும் பங்கேற்றனர். அதில் மூளையின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆய்வில் அதனுள் உள்ள குளுகோஸ் மற்றும் காற்றோட்டத்தின் அளவு பரிசோதிக்கப்பட்டது. அதில் கிடைத்த முடிவின் படி ஆண்களின் மூளை தங்கள் வயதை விட 2 ஆண்டுகள் 4 மாதங்கள் வரை முதியதாகவும், பெண்களின் மூளை தங்களின் வயதை விட 3 ஆண்டுகள் 8 மாதங்கள் இளையதாக இருப்பதாகவும் தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இது வயது வேறுபாடின்றி கிடைத்த சமச்சீரான முடிவு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது!.  

 

Trending News