Tips For Pregnancy After The Age Of 30 : 30 வயதை கடந்த பெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை கடந்ததும் குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு கடினமாக இருப்பதாக உணருகின்றனர். குறிப்பாக 36-39 வயதில் இருக்கும் பெண்களுக்கு, பிரசவ காலத்தில் குழந்தை பிறப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு, பிறக்கும் போதே அவர்களின் வயிற்றில் கருமுட்டைகள் உருவாக ஆரம்பித்து விடும். அதனால், அவர்கள் குழந்தையை பெற்றெடுக்க 20 வயதிலேயே தயாராகிவிடுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 20 வயதில் இருந்து 45 வயது வரை, பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த முட்டைகள் நீண்ட காலம் வயிற்றுக்குள் இருப்பதால் , டவுன் சிண்ட்ரோம் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும் குரோமோசோம்களால் தாக்கமடைய வாய்ப்புகள் உள்ளதாம். குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், இந்த பிரச்சனையை அதிகளவில் சந்திக்கின்றனராம். புள்ளிவிவரப்படி, ஒரு பெண்ணின் அதிகபட்ச கருவுறுதல் நிலைகள் பொதுவாக அவரது பதின்ம வயது மற்றும் இருபதுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
30 வயதிற்கு பின்பு குழந்தைகள் பிறப்பது பற்றி கூறும் மருத்துவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கருவுறுதல் படிப்படியாக குறையத் தொடங்குவதாக கூறுகின்றனர். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சிரமங்களை சந்திக்கவில்லை என கூறுகின்றனர். 30களில் இருந்து 40 வயதை தொட இருக்கும் பெண்கள், இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனராம். இவர்களுக்கு கருவருதலிலேயே பிரச்சனை ஏற்படுவதாக குழந்தை பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!
30களை கடந்து கருவுரும் பெண்கள், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, ப்ரீக்ளாம்ப்சியா உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்கின்ரனர். ஒரு சிலருக்கு, அவர்களது குழந்தைகள் மிகவும் குறைவான எடையுடன் பிறக்கின்றன.
இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு பிரசவ கால சிக்கல்கள் மற்றும் சிசேரியன் பிறப்புகளுக்கு அதிக வாய்ப்புகளும் உள்ளதாக கூறுகின்றனர், மருத்துவ நிபுணர்கள். மேலும், வயதான தாய்மார்களுக்கு இரத்தக் கட்டிகள், குறிப்பாக ஆழமான நரம்புகள் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்குமாம்.
30களை கடந்த பின்பு சரியான முறையில் குழந்தைகளை பெற்றுக்கொள்வது எப்படி?
>30 வயதை கடந்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்கள், முன்கூட்டிய மருத்துவ ஆலோசனையை மேற்கொள்வது நல்லது என கூறப்படுகிறது, இதில் உள்ள உடல்நல அபாயங்களை மதிப்பிடுதல், மருத்துவ வரலாற்றை மதிப்பாய்வு செய்தல் மற்றும் கருத்தரிப்பதற்கு முன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
>சரியான டயட், தினசரி உடற்பயிற்சி, மனச்சோர்வை கண்காணித்தல், உடல் மற்றும் மனதளவில் திடமாக இருத்தல் ஆகியவற்றை 30வயதை கடந்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் பேறுகாலம் எளிமையாக செல்லும்.
>கூடுதலாக, ஃபோலிக் அமிலம் கொண்ட வைட்டமின்களை எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இவற்றை மகப்பேறு காலத்திற்கு முன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
>இரத்த சர்க்கரை அளவை கண்காணிப்பது, சரியான உடல் எடையை பராமரிப்பது, உணர்வு ரீதியாக உதவி தேவைப்பட்டால் அவர்களை உதவிக்கு அழைப்பது ஆகிய பழக்கங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், கர்ப்ப காலத்தின் போது தன்னை தானே நன்றாக பார்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் உலர் பழங்கள்! கண்டிப்பா டயட்டில் சேர்த்துக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ