உணவை ஆற்றலாக மாற்றி ஊக்கம் கொடுக்கும் உணவுகள் எது? முக அழகுக்கும் இதுதான் பெஸ்ட்

Biotin Rich Foods: பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7, உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது கண், முடி, தோல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2023, 07:50 AM IST
  • வைட்டமின் பி7 அதிகமாக உள்ள உணவுகள்
  • அளவுக்கு மிஞ்சினால் உடலுக்கு ஆபத்து
  • முடி மற்றும் முக அழகுக்கு தேவையான ஊட்டச்சத்து
உணவை ஆற்றலாக மாற்றி ஊக்கம் கொடுக்கும் உணவுகள் எது? முக அழகுக்கும் இதுதான் பெஸ்ட் title=

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். அவை நம் உடலின் வேலை திறனை பராமரிக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. பல நேரங்களில் நம் உணவில் இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு உள்ளது.

பயோட்டின் என்பது வைட்டமின் பி7 என பொதுவாக அறியப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். ஒருவருக்கு அதில் குறைபாடு ஏற்பட்டால், அது நமது தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த விட்டமின் குறைபாடு ஏற்பட்டால், முடி உதிர ஆரம்பிக்கும். இது தவிர, கண்கள், மூக்கு மற்றும் வாயில் தடிப்புகள் உருவாகின்றன, சிலருக்கு சருமத்தில் தொற்று மற்றும் சிவப்பு புள்ளிகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க பயோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

பயோட்டின் எதற்கு நல்லது?
வைட்டமின் B7 என்றும் அழைக்கப்படும் பயோட்டின், மனிதர்களின் நரம்பு மண்டலம், கல்லீரல், கண்கள், முடி, சருமம் உட்பட உங்கள் உடலின் பல அமைப்புகளை ஆதரிக்கும் வைட்டமின அகும். இது உடலில் உள்ள என்சைம்கள் மற்றும் செல்கள் தங்கள் வேலையைச் செய்ய உதவுகிறது. 

தினமும் பயோட்டின் 
பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், பயோடின் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒருவேளை தேவைக்கு அதிகமான பயோடின் உடலில் சேர்ந்தால், நமது உடல் அதை சிறுநீர் முலம் அப்புறப்படுத்திவிடும்

முடி வளர்ச்சிக்கு பயோட்டின் 
முடி வளர்ச்சிக்கு பயோட்டின் ஊக்கம் அளிக்கிறது. அதிக அளவில் முடி கொட்டுதல், அடர்த்திக் குறைதல் என முடி தொடர்பான பிரச்சனைகளை பயோடின் குறைபாடு ஏற்படுத்தும்.  

தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு பயோடின்
பயோட்டின் குறைபாடுகள் அரிதானவை. ஆனால் குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் முடி உதிர்தல் அல்லது செதில் சிவப்பு சொறி போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன.

மேலும் படிக்க | ஆயுளை அதிகரிக்க இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம்! ஹைப்பர்டென்சன் மரணங்கள் அலர்ட்

கரு வளர்ச்சிக்கு பயோடின்
கர்ப்பிணிப் பெண்களுக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படலாம். குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, கர்ப்ப காலத்தில் பயோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. இருப்பினும், அதிக அளவு பயோட்டின் குழந்தைக்கு ஆபத்தானது, எனவே பயோட்டின் அளவாகவே எடுத்துக் கொள்ளவும்.  

பயோட்டின் இயற்கை ஆதாரங்கள்

பயோட்டின் பல உணவுகளிலும் காணப்படுகிறது. முட்டை கரு, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகளில் காணப்படுகிறது. இதைத் தவிர பாதாம், வேர்க்கடலை, பெக்கன்கள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள், சோயாபீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் தானியங்கள்ம், காலிஃபிளவர், பலவிதமான வாழைப்பழங்கள், அவகோடா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காளான் என பல உணவுப்பொருட்களில் பயோடின் அதிகமாக உள்ளது.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடவே வேண்டாம்! காரணம் இதுதான்! ‘சிலருக்கு அறிவுரை’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News