வெள்ளை முடி பிரச்சனையா, இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க

நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2022, 03:06 PM IST
  • வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக முடியும்
  • வீட்டில் எண்ணெய் தயார்
  • விளைவு சில நாட்களில் தெரியும்
வெள்ளை முடி பிரச்சனையா, இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க title=

புதுடெல்லி: இளம் வயதிலேயே தலைமுடி வெள்ளையாக மாறுவது இன்றைய காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானவை. எனவே முடியின் கருமையை எவ்வாறு பராமரிப்பது என்பதை இங்கு நாம் காண்போம். 

வெள்ளை முடியைக் கண்டு விரக்தியடைய வேண்டாம்
முடி நரைப்பதற்கு உண்மையான காரணம் தவறான உணவுமுறை மட்டுமல்ல, பல நோய்களின் தாக்கத்தாலும், முடி முன்கூட்டியே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. கூந்தலை கருப்பாக வைத்திருக்க, அதிக டென்ஷன் எடுக்க வேண்டியதில்லை, ஏனென்றால் இயற்கையாகவே கருமையாகிவிடும், இதற்கு விலை உயர்ந்த பொருட்கள் தேவைப்படாது.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த விஷயங்கள் பயன்படுத்தப்படும்
முதலில், ஒரு கப் கடுகு எண்ணெய் மற்றும் அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர், கறிவேப்பிலை, ஒரு துண்டு கற்றாழை, கலோஞ்சி, ஆளி விதை மற்றும் கருப்பு சீரகத்தை எடுத்து வைக்கவும்.

முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கறிவேப்பிலையைச் சேர்த்து, ஒரு துண்டு கற்றாழையைப் போட்டு, ஒரு டீஸ்பூன் ஆளி விதையுடன் கருஞ்சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போடவும். தண்ணீர் அரை கிலோவிற்கும் குறைவாக இருக்கும் போது, ​​அந்த தண்ணீரில் ஒரு கப் கடுகு எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை வேகவைக்கவும். அதன் பிறகு அது எண்ணெய் போல ஆகிவிடும். பின்னர் இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது தடவவும். வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News