குளிர்கால டிப்ஸ்: டின்னருக்கு எது ரொம்ப நல்லது...? கோதுமை ரொட்டியா...? அரிசி உணவா...?

Health Tips: குளிர்காலத்தில் இரவு உணவுக்கு கோதுமை ரொட்டியை சாப்பிடலாமா அல்லது அரிசி சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 2, 2024, 01:35 PM IST
  • குளிர்கலாத்தில் எளிதாக உடல்நலக் குறைவு ஏற்படும்.
  • எனவே, உணவுப் பழக்கவழக்கத்தில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
  • ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
குளிர்கால டிப்ஸ்: டின்னருக்கு எது ரொம்ப நல்லது...? கோதுமை ரொட்டியா...? அரிசி உணவா...? title=

Health Tips For Winter Season: குளிர்காலம் தொடங்கிவிட்டது. நவம்பர், டிசம்பர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் வரை பனி, மழை கொட்டித் தீர்க்கும். இந்த நேரத்தில் நீங்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும். உடல்நலன் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியமாகும். அதிலும் இரவு உணவும் மிக முக்கியமாகும். 

இரவு உணவை உட்கொள்ளும்போது அது ஆரோக்கியமானதாகவும், எளிதாக செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில், இரவு உணவாக அரிசியை எடுத்துக்கொள்ளலாமா அல்லது கோதுமை ரொட்டியை எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வி பலருக்கும் வரும். இருப்பினும் இந்த குளிர் காலத்தில் அரிசி சார்ந்த உணவோ அல்லது கோதுமை சார்ந்த உணவோ எதை சாப்பிட்டால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

கோதுமை நன்மைகள்

கோதுமை ரொட்டி என்பது இந்த குளிர் காலத்தில் ஏற்ற உணவுகளில் ஒன்றாகும். காரணம், கோதுமை ரொட்டி உடலுக்கு வெதுவெதுப்பை அளிக்கும். மேலும் கோதுமை ரொட்டியுடன் காய்கறிகளையும் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இதனால் உடலுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி, செரிமானமும் சீராக இருக்கும். எனவே கோதுமை ரொட்டியை இரவு உணவாக அதுவும் இந்த குளிர்காலத்தில் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கணுமா... இந்த சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்

அரிசி உணவின் நன்மைகள்

அரிசி சாதம், பிரியாணி, புலாவ் போன்ற அரிசி சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் குளிர்காலத்தில் பல நன்மைகள் இருக்கின்றன. இதனால் நீங்கள் ருசியாக உண்ணலாம். உடலுக்கும் இதமளிக்கும். செரிமானமும் சீராக இருக்கும். குளிருக்கும் இதமளிக்கும் என்பதால் நிச்சயம் இதையும் சாப்பிடலாம். 

கோதுமையா அரிசியா...?

கோதுமை ரொட்டியும் சரி, அரிசி சார்ந்த பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளும் சரி இரண்டுமே குளிர்காலத்தில் இதமளிக்கக் கூடியவை என்றாலும் இரவு உணவாக எதை எடுத்துக்கொள்வது என்பது உங்களின் ருசி சார்ந்த விருப்பம்தான். இருப்பினும், நீங்கள் வயிறு நிறைந்த உணர்வை பெற வேண்டும் என்றாலும், அதிக நார்ச்சத்து கொண்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் கோதுமை ரொட்டியை தேர்வு செய்யுங்கள். 

மறுமுனையில் உடலுக்கு அதிக இதமளிக்கக் கூடிய மற்றும் ருசியான உணவு வேண்டுமென்றால் அரிசி சார்ந்த உணவுகளை தேர்வு செய்துகொள்ளலாம். எனவே இறுதி முடிவு உங்கள் கையில்தான்.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை) 

மேலும் படிக்க | இதயம் முதல் எலும்புகள் வரை... ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் எள்ளு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News