எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை

What is Hypercalcemia: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் உங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம், சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம் மற்றும் உங்கள் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளில் தலையிடலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2023, 01:50 PM IST
  • ஹைபர்கால்சீமியாவால் என்ன ஆபத்து?
  • கால்சியத்தால் ஏற்படும் பிரச்சனைகள்
  • உணவில் இருந்து கால்சியம்
எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை title=

கால்சியம் நம் உடலில் ஒரு முக்கியமான கனிமமாகும்; இது நமது உறுப்புகள், தசைகள் மற்றும் எலும்புகளின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. நமது உடலில் அதிக அளவு கால்சியம் இருப்பது, ஹைபர்கால்சீமியா (Hypercalcemia) என்றும் அழைக்கப்படுகிறது, இது நமது உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் உங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம், சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம் மற்றும் உங்கள் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளில் தலையிடலாம். 

ஹைபர்கால்சீமியாவின் வகைகள் யாவை?

இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகமானால் அது ஹைபர்கால்சீமியா என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, Hypercalcemia மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது. இரத்தத்தில் கால்சியத்தில் அளவு 10.5 முதல் 11.9 mg/dL இருந்தால் அது சாதாரணமானது. அதுவே 12.0 முதல் 13.9 mg/dL வரையில் இருந்தால் மிதமானது என்றும், 14.0 முதல் 16.0 mg/dL இருந்தால் பிரச்சனை மோசமாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

ஹைபர்கால்சீமியா பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் உணவில் கால்சியம் கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.  

கால்சியம் அதிகமாக உள்ள உணவுகள்

பச்சை காய்கறிகள், பாதாம் உட்பட பல உலர் பழங்கள், வாழைப்பழம், முட்டை, எள் என பல உணவுகளில் கால்சியம் உள்ளது. ஹைபர்கால்சீமியா ஏற்பட்டால், உணவு உட்கொள்வதில் மருத்துவர்களின் பரிந்துரையை கடைபிடிப்பது அவசியம் ஆகும்.

ஹைபர்கால்சீமியாவின் அறிகுறிகள்

ஓரளவு கால்சியம் உடலில் அதிகரித்தால், அது அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால், மோசமாக பாதிக்கப்பட்டால், உடலின் உறுப்புகள் பாதிக்கப்படலாம். உடலில் அதிகப்படியான கால்சியம் இருந்தால் வயிற்று வலி, வாந்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகள் தோன்றும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயின் அபாயங்கள்! டயபடீசால் பாதிக்கப்படும் உடலுறுப்புகள்

உடலில் கால்சியம் அளவு அதிகரித்தால், அது எலும்புகள் மற்றும் தசைகளை பாதிக்கலாம். இது தசைகளில் பலவீனம், வலி ​​மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும், சிறுநீரகத்தை சேதப்படுத்தும். மேலும், தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு இருந்தால், அது உடலில் கால்சியம் அதிகரித்ததற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

மேலும், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு மற்றும் எரிச்சல் என அறிகுறிகள் மாறலாம். மேலும், ஹைபர்கால்சீமியாவால் அசாதாரண இதய துடிப்பு, படபடப்பு மற்றும் மயக்கம் ஏற்படும்.

ஹைபர்கால்சீமியாவுடன் தொடர்புடைய பொதுவான ஆபத்து காரணிகள்

நோய் பாதித்தவர்களுக்கு ஹைபர்கால்சீமியா ஏற்படலாம். நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய் ஆகியவை ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்தும். காசநோய் மற்றும் சார்கோயிடோசிஸ் போன்ற நோய்கள் உங்கள் உடலின் கால்சியம் அளவை உயர்த்தலாம்.

உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதால், கால்சியம் அளவு அதிகமாகலாம். உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும் டையூரிடிக்ஸ் போன்ற மருந்துகள் ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்தும். PTH வெளியீட்டைத் தூண்டும் லித்தியம் போன்ற மருந்துகளும் இதற்கு வழிவகுக்கும்.
அதேபோல, அதிகப்படியான கால்சியம் அல்லது வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதால் ஹைபர்கால்சீமியா ஏற்படலாம்.
இதற்கான ஆபத்து காரணிகள் யாவை?

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ்! சுகர் லெவலை குறைக்கும் டயட் ஃபார்முலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News