கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க டயட் சார்ட்: கோடைக்காலம் வந்தாலே நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க முயற்ச்சியில் ஈடுபத்துவிடுவோம். ஏனென்றால், கோடை காலம் வந்தவுடன் மக்கள் தகுந்த ஆடைகளை அணிவார்கள். அத்தகைய சூழ்நிலையில், அதிகரித்த எடை உங்கள் தோற்றத்தை கெடுக்கலாம். அதே சமயம், உடல் எடையை குறைக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியமயக்கும். அதனால்தான் கோடையில் உடல் எடையை குறைக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே இவை அனைத்தையும் மனதில் வைத்து இந்த கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
கோடையில் உடல் எடையை குறைக்க இந்த வழிகளை முயற்சிக்கவும்-
ஸ்விம்மிங் செய்யுங்கள்
கோடையில் உடல் எடையை குறைக்க நீச்சல் சிறந்த வழி. ஏனெனில் நீச்சல் உடல் எடையை குறைப்பதோடு, உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. மறுபுறம், நீங்கள் நீச்சல் செய்தால், புத்துணர்ச்சியுடன் உணர்கிறீர்கள், மேலும் எடையும் வேகமாக குறையும். கோடையில் உடற்பயிற்சி செய்வது வியர்வையை உண்டாக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீச்சல் மூலம் உங்கள் எடையைக் குறைக்கலாம்.
மேலும் படிக்க | கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் டிப்ஸ்! நீரிழிவு அறிகுறிகள்!
தண்ணீர் நிறைய குடிக்கவும்
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், நிறைய தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் குடிப்பதால் நச்சுகள் வெளியேறி உடல் எடையை குறையத் தொடங்கும். அதே சமயம், உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிப்பது உடல் எடையை எளிதில் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
தர்பூசணி சாப்பிடுங்கள்
கோடையில் உடல் எடையை குறைக்க தர்பூசணியும் சாப்பிடப்படுகிறது. தர்பூசணியில் சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடல் எடையை குறைக்க இதை உட்கொள்ளலாம்.
நடைப்பயிற்சி செய்யுங்கள்
கோடையில் உடல் எடையை குறைக்க தினமும் காலை மற்றும் மாலை நடைப்பயிற்சி செய்வது நல்லது. காலை வேளையில் நடைப்பயிற்சி செய்வது மன அமைதியை தருகிறது. நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்கள் விலகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை டக்கென்று கூடிவிட்டதா... இதெல்லாம்தான் காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ