இதை பண்ணுங்க! தொப்பையை உடனே குறைக்கலாம்!

Weight Lose Tips: கடினமாக உடற்பயிற்சி மற்றும் உணவுமுறையில் மாற்றம் ஆகிய இரண்டையும் முறையாக கடைபிடித்தால் உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.    

Written by - RK Spark | Last Updated : Jan 10, 2023, 06:39 AM IST
  • வயிற்று பகுதியில் அதிகமாக கொழுப்பு சுற்றியிருப்பதால் தான் தொப்பை போடுகிறது.
  • கடினமாக உடற்பயிற்சி மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
  • ளிர்காலத்தில் கேரட் உங்களுக்கு சிறந்த எடை இழப்புக்கள் நிவாரணியாக இருக்கும்
இதை பண்ணுங்க! தொப்பையை உடனே குறைக்கலாம்! title=

உடல்பருமனை விடவும் பலரும் தொப்பையால் தான் அதிகம் அவதிப்படுகின்றனர், உடல் மெலிவாக இருப்பவர்களுக்கும் கூட இப்போது தொப்பை இருக்கின்றது.  வயிற்று பகுதியில் அதிகமாக கொழுப்பு சுற்றியிருப்பதால் தான் தொப்பை போடுகிறது, உடல் பருமனை கூட எளிதாக குறைத்துவிடலாம் ஆனால் தொப்பையை குறைப்பது தான் பலருக்கும் கடினமானதாக இருக்கிறது.  உணவுமுறை, உடல் உழைப்பின்மை, சுற்றுச்சூழல் காரணிகள், மரபியல் மற்றும் பிற காரணிகள் தொப்பை போடுவதற்கு வழிவகுக்கின்றன.  ஒரு குறிப்பிட்ட உணவு வகை அல்லது சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் எடை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறது என்றாலும், வாரம் முழுவதும் நாம் உட்கொள்ளக்கூடிய கலோரிகளின் மொத்த எண்ணிக்கை உங்களின் உடல் பருமனுக்கும், தொப்பைக்கும் காரணமாகின்றது.  எனவே நீங்கள் உங்கள் எடையை இழக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால் தினமும் உடற்பயிற்சி செய்வதோடு சேர்த்து உணவு முறைகளிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியது அவசியம்.  கடினமாக உடற்பயிற்சி மற்றும் உணவுமுறையில் மாற்றம் ஆகிய இரண்டையும் முறையாக கடைபிடித்தால் உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.  இப்போது நமது வீட்டிலேயே இருக்கக்கூடிய காய்கறிகளை வைத்தே தொப்பையை குறைக்க முடியும், அதைப்பற்றி பின்வருமாறு காண்போம். 

மேலும் படிக்க | Weight Loss: இது போதும்..வெறும் 10 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்

1. கேரட் சாறு: உங்கள் உடலிலுள்ள முக்கியமாக வயிற்று பகுதியிலுள்ள கொழுப்பை குறைப்பதில் கேரட் சாறு முக்கிய பங்கு வகிக்கின்றது.  அதுவும் இந்த குளிர்காலத்தில் கேரட் உங்களுக்கு சிறந்த எடை இழப்புக்கள் நிவாரணியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  கேரட்டில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அதனை தினசரி சாப்பிடுவதன் மூலம் உங்களின் தினசரி ஊட்டச்சத்து தேவை பூர்த்தியாகிறது.  இதில் குறைந்த கலோரி, அதிகமான நார்ச்சத்து மற்றும் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.  தினமும் நீங்கள் கேரட் சாறை குடிக்கும்போது உங்கள் உடலிலுள்ள கூடுதல் கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.

2. முட்டைக்கோஸ் சாறு: வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட பல வயிற்றுப் பிரச்சனைகளுக்கு  முட்டைக்கோஸ் சாறு சிறந்த பலனை கொடுக்கிறது.  இது உங்கள் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து உடலிலுள்ள கழிவுகளை அகற்றிவிடுகிறது.  இந்த அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள் தண்ணீரை உறிஞ்சி நமது உடலை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது.  இதன் மூலம் நீங்கள் உணவுகளை அதிகமாகி உட்கொள்ளப்படுவது தடுக்கப்படுகிறது, இந்த முட்டைகோஸ் சாறில் சுவைக்காக சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது சிறிது சாட் மசாலாவை சேர்த்து கொள்ளலாம்.

3. பீட்ரூட் சாறு: இந்த குளிர்காலத்தில் நீங்கள் மண்ணுக்கு கீழ் விளையும் இந்த வகை காய்கறிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இந்த வகை காய்கறிகளில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இந்த சிவப்பு நிற காய்கறி அதிகளவில் கலோரிகள் மற்றும் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.  நீங்கள் சுவைக்காகவும், கூடுதல் பலனை பெறவும் நீங்கள் பீட்ரூட் உடன் கேரட் மற்றும் ஆப்பிள் போன்ற பிற காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

4. பசலைக் கீரை சாறு: பொதுவாக பசலை கீரை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.  பசலை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது, இந்த குளிர்காலத்தில் நீங்கள் பசலை கீரையை சாறு செய்து குடித்துவர உங்கள் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்துவிடும்.

5. சுரைக்காய் சாறு: பொதுவாக உடல் எடை குறைப்பில் சுரைக்காய் சாறு அதிகளவில் பயன்படுகிறது.  இதில் அதிக நார்ச்சத்து உள்ளது, இதனை நீங்கள் குடிப்பதன் மூலம் நீண்ட நேரம் வயிறு முழுமையான உணர்வு ஏற்பட்டு அதிகப்படியான கலோரிகள் உட்கொள்ளப்படுவது தடுக்கப்படுகிறது.  இதனால் உங்களுக்கு உடல் எடையோடு சேர்ந்து தொப்பையும் மளமளவென குறைந்துவிடும்.

மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News