பைல்ஸ் மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது, ஆனால் இந்த நோய் மிகவும் வேதனையானது. பைல்ஸ் மருத்துவ துறையில் மூல நோய் என்று அழைக்கப்படுகிறது. இது ஆசனவாய் அல்லது கீழ் மலக்குடலின் உள்ளே அல்லது வெளியே உள்ள நரம்புகள் வீக்கமடையும் ஒரு நிலை ஆகும். மலம் கழிக்கும் போது வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது இந்த பைல்ஸ் பிரச்சனையின் அறிகுறிகளாகும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் எழுந்து உட்கார்ந்தாலும் கூட வலி ஏற்படுகிறது. இந்த நோய் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மேலும் ஆபத்தை அதிகரிக்கும். அத்தகைய சில வீட்டு வைத்தியங்களை இங்கே நாங்கள் உங்களுக்கு கொண்டுவந்துள்ளோம், இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூலநோயை குணப்படுத்த முடியும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
* கற்றாழை ஜெல்லை ஆசன வாய் மீது பகுதி மீது தடவினால் வலி மற்றும் அரிப்பு இரண்டிலும் நிவாரணம் கிடைக்கும்.
* ஆலிவ் எண்ணெயை வீக்கமுள்ள இடத்தில் தடவினால் வீக்கம் குறையும்.
* சீரகத்தை தண்ணீரில் கலந்து அரைக்கவும். இந்த பேஸ்ட்டை ஆசன வாய் மீது பகுதியில் தடவவும். வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
* லஃப்பாவின் சாற்றை எடுத்து அதில் சிறிது மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
* எலுமிச்சை சாற்றில் இஞ்சி மற்றும் தேன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை குடிப்பது நன்மை பயக்கும்.
* தேங்காய் எண்ணெய் தடவினால் எரிச்சல் மற்றும் வீக்கம் குறையும்.
* ஒரு கிளாஸ் மோரில் கால் பங்கு ஓம பொடியைச் சேர்த்து மதிய உணவுக்குப் பிறகு குடிக்கவும்.
பைல்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில ஆரம்ப அறிகுறிகள்
* பைல்ஸ் இருந்தால் மலம் கழிக்கும் போது இரத்தம் சேர்த்து வெளிவரும். இப்படி ஒரு அறிகுறியைக் கண்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
* ஆசன வாய் பகுதியை தொடும் போது, அவ்விடத்தில் ஏதேனும் வீக்கம் இருப்பதைக் கண்டால், பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம்.
* மலம் கழித்த பின்னரும், நீங்கள் நிம்மதியாக உணரவில்லை என்றால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
* மலம் கழிக்கும் போது, சளியும் வெளியேறுவதைக் கண்டால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறியாகும்.
* பல நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்த பின், ஆசன வாய் பகுதியில் காயங்கள் மற்றும் சிவந்து இருப்பதோடு, உட்காரவே முடியாமல் தவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR