பொடுகுக்கு விளக்கெண்ணெய்: பொடுகு என்பது முடி தொடர்பான பிரச்சனையாகும். இதனால் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சிரமப்படுகின்றனர். ஆனால் பொடுகை நீக்க விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். அதேபோல் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்புகளை போக்க விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அதன் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது உச்சந்தலையின் pH ஐ சரியாக வைத்திருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பொடுகு தொல்லை உங்களுக்கும் இருந்தால், நீங்கள் விளக்கெண்ணெயைப் பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பொடுகுத் தொல்லையைப் போக்க, விளக்கெண்ணெயை முடியில் தடவவும் -
இஞ்சி சாறுடன் விளக்கெண்ணெய்
இஞ்சி சாற்றைப் பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடியில் துர்நாற்றம் வீசும், ஆனால் அதன் பயன்பாடு பொடுகு, அழுக்கு மற்றும் இரசாயனங்களை நீக்கும். இதற்கு இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் இஞ்சி சாறு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்ய வேண்டும். இதன் மூலம் பொடுகு பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க
விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை
தேங்காய் எண்ணெயில் அதிக புரதம் உள்ளது, இது பொடுகை நீக்க உதவுகிறது. முட்டை உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மற்ற உதவும். இந்த மூன்றையும் கலந்து முடியில் தடவலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் தடவி, பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
விளக்கெண்ணெய் மற்றும் ஆர்கன் எண்ணெய்
விளக்கெண்ணெய் மற்றும் அர்கான் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். ஆர்கன் எண்ணெய் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. எனவே வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Cervical Pain: கழுத்து வலியில் இருந்து விடுபட சில எளிய பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ