மழைக்காலம் (Monsoon) என்பது அனைவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் காலம் தான். இருப்பினும், மழைக்காலம் குழந்தைகளுக்கு ஏராளமான நோய்களையும் கொண்டுவருகிறது. மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்களிலிருந்து, டெங்கு மற்றும் மலேரியா போன்ற பிற தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது.
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்களும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. மழைக்காலத்தில், உணவு மூலம் பரவும் நோய்களின் பாதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். சாதாரண சளி காய்ச்சல் முதல், டெங்கு மற்றும் மலேரியா, வயிற்றுப்போக்கு உட்பட பலவிதமான் பருவ கால நோய்களில் இருந்து, உங்கள் குழந்தைகளை பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய 5 விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:
1. சுறுசுறுப்பான வாழ்க்கை: தற்போதைய COVID-19 நிலைமை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, விளையாட்டுகள் போன்ற உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுத்துவது சவாலாக இருக்கலாம். அதனால், யோகா, நடனம் போன்ற விஷயங்களில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்த முயற்சிக்கவும்.
2. ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு: உங்கள் குழந்தைகளின் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு மற்றும் காய்கறி, பழங்களை அதிகம் சேருங்கள். இது பச்சை இலை காய்கறிகளாக இருக்கலாம், பருவகால பழங்களின் கலவையாக இருக்கலாம். பழங்களை அவர்களுக்கு பிடித்த வகையில் ஜூஸாகவோ, ஷேக்கால்கவோ செய்து கொடுக்கலாம்.
ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
3. வைட்டமின் சி: வைட்டமின் சி நோய் எதிர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக உலகளவில் COVID-19 தொற்றுநோயால் விட்டமின் சியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆப்பிள், வாழைப்பழங்கள், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை அதிகம் கொடுக்க வேண்டும்.
4. துரித உணவைத் தவிர்க்கவும்: உங்கள் குழந்தைக்கு பிடித்த பீஸ்ஸா அல்லது பர்கரை வாங்கிக் கொடுக்கக் கூடாது. மழைக்காலங்களில், துரித உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழைக்காலம் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நேரம்.
5. தனிப்பட்ட சுகாதாரம்: இன்றைய காலகட்டத்தில், தூய்மை, தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிப்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கும், சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். தேங்கி நிற்கும் நீர் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக இருக்கும். உங்கள் குழந்தைகளை கொசுக்களிலிருந்து காப்பாற்ற விரும்பினால், அவர்களைப் பாதுகாக்க ஒரு கொசு வலை, ஆல்-அவுட், ஒரு கொசு விரட்டும் பேட்ச் அல்லது கிரீம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
ALSO READ | Health Alert! வெறும் வயிற்றுடன் தூங்க செல்வது கடும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR