மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை பொது அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2022, 08:45 PM IST
  • கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
  • மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
  • சுகாதாரத்துறை வெளியிடுள்ள முக்கிய அறிவிப்பு
மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு title=

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை மருத்துவமனை மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. 

அந்த அறிவிப்பில், அடுத்த 6 மாதத்திற்கு தேவையான சோதனை கருவிகளை திட்டமிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தினசரி மருந்துகளின் பயன்பாடு மற்றும் இருப்பை தெரிவிக்க வேண்டும். 30ம் தேதிக்குள் கொரோனா சிகிச்சை ஒத்திகையை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தினசரி சோதனை செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

மேலும் படிக்க | கொரோனா பரவாமல் இருக்க சுத்தம் சுகாதாரமாக இருங்கள்! அறிவுரை கூறிய மத்திய அமைச்சர்

பல் ஆக்சி மீட்டர், தெர்ம்ல் ஸ்கேனர் கொண்டு சோதனை செய்ய வேண்டும். தேவையான மாஸ்க்,பிபிஇ கிட் உள்ளிட்டவைகளை டிஎன்ம்எஸிசியிடம் தெரிவிக்க வேண்டும். அனைத்து மருத்துவ பணியாளர்களும் மருத்துமனையில் மாஸ்க் அணிய வேண்டும். மருத்துவ மாணவர்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  

மேலும், மருத்துவ கல்லூரிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி மையங்கள் முழு பணியாளர்களுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். தனி குழு தினசரி படுக்கை எண்ணிக்கை மற்று ஆக்சிஜன் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா சோதனை வசதியை அதிகரித்து, உடனடியாக முடிவுகளை அளிக்க வேண்டும். சிறப்பு மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மூத்த செவிலியர் ஆய்வு செய்ய வேண்டும். உதவியாளர்களை கொரோனா வார்டுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ’அதிமுக இணைப்பு ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்’ சின்னம்மாவை சீண்டும் அதிமுக மாஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News