தைராய்டு பிரச்சனையா? இந்த உணவுகள் உங்கள் உணவில் அவசியம் இடம்பெற வேண்டும்!

Hypothyroidism & Hyperthyroidism : உடலின் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பது என்பது, ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 27, 2024, 12:55 PM IST
  • தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பு
  • ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை
  • தைராய்டு பிரச்சனையாகாமல் இருக்க ஊட்டச்சத்து உணவுகள்
தைராய்டு பிரச்சனையா? இந்த உணவுகள் உங்கள் உணவில் அவசியம் இடம்பெற வேண்டும்! title=

 

Foods For Thyroid: தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி தான், தைராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது. தைராய்டு ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் சென்று உடலின் திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட வேண்டுமானால், அதற்கு மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன.

தைராய்டு சுரப்பில் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு தைராய்சு சுரப்பியை இயக்கும் உடல் பாகங்கள் காரணமாகவும் இருக்கலாம். அதோடு, ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்பட்டால், முழு உடலும் பாதிக்கப்படும்.  மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு இந்த ஹார்மோன்கள் அவசியம் ஆகும் 

ஹைபோதைராய்டிஸம் (Hypothyroidism)
தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலையை ஹைப்பர் தைராய்டிஸம் என்று சொல்வார்கள். இது உடல் இயக்கத்தை மந்தப்படுத்திவிடும்.

ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism)

உடலின் தேவைக்கு அதிகமான அளவு ஹார்மோன்கள் சுரப்பது, ஹைபர்தைராய்டிஸம் எனப்படுகிறது. இது, உடலின் அனைத்து இயக்கங்களின் வேகத்தை கூட்டும். நாளடையில், மன அழுத்தம் அல்லது பதட்டம் என தவறாகப் புரிந்துக்கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படும்.  

ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டால், உணவில் சில ஊட்டச்சத்துக்களைச் சேர்க்க வேண்டும்.
 
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ சத்து, தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியமானது. அதேபோல ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் வைட்டமின் ஈ அவசியம் ஆகும். சூரியகாந்தி விதைகள் மற்றும் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்

செலினியம்
தைராய்டு ஹார்மோன் தொகுப்புக்கும், செயலற்ற தைராய்டு ஹார்மோனை (T4) அதன் செயலில் உள்ள வடிவத்திற்கு (T3) மாற்றுவதற்கும் செலினியம் அவசியம் ஆகும். சூரியகாந்தி விதைகள், மத்தி மீன், கோழி, காளான் மற்றும் டுனாவில் செலினியம் காணப்படுகிறது.
 
மெக்னீஷியம்
பாதாம், முந்திரி, பூசணி விதைகள், ஓட்ஸ், டார்க் சாக்லேட், பீன்ஸ் போன்றவற்றில் மெக்னீசியம் உள்ளது. இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான என்சைம் செயல்பாட்டை ஆதரிக்கிறது.

வைட்டமின் பி
கோழி, டுனா, வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி விதைகளில் காணப்படுகிறது. வைட்டமின் பி வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதுடன் ஆற்றல் உற்பத்திக்கு நல்லது. தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கும் வைட்டமின் பி உடலுக்கு மிகவும் அவசியமானது.

வைட்டமின் சி
வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தைராய்டு சமநிலைக்கு அவசியமானது. நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வைட்டமின் சி, கிவி, பெல் பெப்பர்ஸ், ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது. தைராய்டு ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கு சமச்சீர் உணவு முக்கியமானது என்பதை மறந்துவிட வேண்டாம்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் குறைக்கும் ஹெல்த் சப்ளிமெண்ட் மாத்திரை விபரீதம்! ஒருவர் பலி, சிகிச்சையில் 70 பேர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News