30 நிமிடங்களில் COVID test result-ஐ தருகிறது இந்த மொபைல் அடிப்படையிலான செயல்முறை

இந்த சாதனம் 5 நிமிடங்களுக்குள் வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட மாதிரிகளின் தொகுப்பை துல்லியமாகக் கண்டறிந்தது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 07:01 PM IST
  • COVID-19 வைரஸ் தொற்றை கண்டறியும் மொபைல் போன் மாதிரி.
  • 30 நிமிடங்களில் சோதனை முடிவு தெரியவரும்.
  • வைரசின் அளவையும் கண்டுபிடிக்க முடியும்.
30 நிமிடங்களில் COVID test result-ஐ தருகிறது இந்த மொபைல் அடிப்படையிலான செயல்முறை title=

CRISPR- அடிப்படையிலான COVID-19 நோய்த்தொற்றை கண்டறியும் சோதனைக்கு விஞ்ஞானிகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்தி 30 நிமிடங்களுக்குள் துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

செல் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, புதிய நோயறிதல் சோதனை, ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா இல்லையா என்பதை மட்டும் கண்டறிவதில்லை. தொற்று இருந்தால், அந்த மனிதரின் மாதிரியில் வைரசின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும் கண்டறியும்.

இன்றுவரை அனைத்து CRISPR நோயறிதல்களுக்கும் வைரஸ் RNA-வை DNA-வாக மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இது நேரத்தையும் சிக்கலையும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மாறாக, புதிய அணுகுமுறை அனைத்து மாற்ற மற்றும் பெருக்க நடவடிக்கைகளையும் தவிர்க்கிறது. இந்த முறை வைரஸ் RNA-வை நேரடியாகக் கண்டறிய CRISPR ஐப் பயன்படுத்துகிறது.

"CRISPR- அடிப்படையிலான நோயறிதல்களைப் பற்றி நாங்கள் உற்சாகமாக இருப்பதற்கான ஒரு காரணம், தேவைப்படும் நேரத்தில் விரைவான, துல்லியமான முடிவுகளுக்கான சாத்தியமாகும்" என்று அமெரிக்காவின் கிளாட்ஸ்டோன் நிறுவனங்களின் மூத்த புலனாய்வாளர் ஜெனிபர் டௌட்னா கூறினார்.

“சோதனைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ள இடங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். அல்லது அடிக்கடி, விரைவான சோதனை தேவைப்படும்போதும் இது உதவியாக இருக்கும். இது COVID-19 சோதனையில் நாம் கண்டுள்ள பல இடையூறுகளை அகற்றக்கூடும்” என்று டௌட்னா கூறினார்.

இந்த பணியை அடிக்கோடிட்டுக் காட்டும் தொழில்நுட்பமான CRISPR-Cas மரபணு எடிட்டிங்கை கண்டுபிடித்ததற்காக டவுட்னா வேதியியலுக்கான 2020 நோபல் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சோதனையில், Cas13 புரதம் ஒரு மூலக்கூறுடன் இணைக்கப்பட்டு, வெட்டப்படும்போது ஒளிரும். பின்னர் ஒரு நாசி துணியால் நோயாளியின் மாதிரியுடன் கலக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“மாதிரி, ஸ்மார்ட்போனுடன் (Smartphone) இணைக்கும் சாதனத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாதிரியில் SARS-CoV-2-வின் RNA இருந்தால், Cas13 செயல்படுத்தப்பட்டு மூலக்கூறை வெட்டி ஒரு ஒளிரும் சமிக்ஞையை வெளியேற்றும்” என்று அவர் கூறினார்.

ALSO READ: கொரோனா காரணமாக கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்: ஐநா

ஸ்மார்ட்போன் கேமரா, ஒரு நுண்ணோக்கியாக மாற்றப்படுகிறது. அதனால் ஒளிரும் தன்மையைக் கண்டறிந்து, நோயாளியின் மாதிரியில் வைரஸ் (Virus) உள்ளதா இல்லையா என்பதைக் காட்ட முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதிரியை பலவிதமான மொபைல் போன்களுடன் இணைக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த தொழில்நுட்பமும் அனைவரும் அணுகும் வகையில் உள்ளது.

நோயாளிகள் மாதிரிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் தங்கள் சாதனத்தை சோதித்தபோது, ​​மருத்துவ ரீதியாக பொருத்தமான வைரஸ் சுமைகளைக் கொண்ட மாதிரிகளுக்கான முடிவுகளை இது மிக விரைவான நேரத்தில் வழங்க முடியும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த சாதனம் 5 நிமிடங்களுக்குள் வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட மாதிரிகளின் தொகுப்பை துல்லியமாகக் கண்டறிந்தது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

"குறைந்த வைரஸ் அளவு கொண்ட மாதிரிகளில், வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்வதில் இந்த சாதனம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ALSO READ: Alert: குழந்தைகளுக்கு COVID-19 தொற்று இருப்பதே பெரும்பாலும் தெரிவதில்லை, கவனம் தேவை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News