குண்டு குண்டா இருக்குற தொப்பை குறையுமா? இந்த பச்சை இலை போதும்

Centella Asiatica For Belly Fat: அதிகரிக்கும் எடையை எளிதில் குறைக்க முடியாது, ஆனால் ஒரு சிறப்பு வகை ஆயுர்வேத பண்புகள் நிறைந்த பச்சை இலைகளை சாப்பிட்டால், சில நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 15, 2023, 12:51 PM IST
  • வல்லாரை கீரை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி.
  • உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • வல்லாரை கீரையை எப்படி சாப்பிடுவது?
குண்டு குண்டா இருக்குற தொப்பை குறையுமா? இந்த பச்சை இலை போதும் title=

உடல் எடையை குறைக்க வல்லாரை கீரையின் நன்மைகள்: இன்றைய காலக்கட்டத்தில், பலருக்கு உடல் எடை (Weight Loss) அதிகரிக்கும் பிரச்சனை இருந்து வருகின்றனர், நடுத்தர வயதினரை மட்டுமல்ல, பல இளைஞர்களும் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு படிவதால் சிரமப்படுகிறார்கள். இதற்கு முக்கிய தவறான உணவு பழக்கமும், வித்தியாசமான வாழ்க்கை முறையும்தான். அதுமட்டுமின்றி உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், ஒரு சிறப்பு பச்சை இலையை உட்கொண்டால், எளிதாக உடல் எடையவ குறைக்கலாம் என்று கூறியுள்ளார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

உடல் எடையை குறைக்க இந்த இலையை சாப்பிடுங்கள்
நிகில் வாட்ஸின் கூற்றுப்படி, வல்லாரை கீரைகள் (Vallarai Keerai) எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது அறிவியல் மொழியில் சென்டெல்லா ஆசியாட்டிகா (Centella Asiatica) என்றும் சமஸ்கிருதத்தில் மண்டுகபர்ணி என்றும் அழைக்கப்படுகிறது. இது போன்ற மூலிகை தான் நம் உடலுக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | Vitamin B12: அசைவம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை... சைவத்திலேயே கொட்டிக்கிடக்கு!

வல்லாரை கீரை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி?
வல்லாரை கீரைகள் எந்த ஆயுர்வேத மருந்துக்கும் குறைவானது அல்ல, இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. வல்லாரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் காரணமாக, இது எடையைக் குறைக்க உதவுகிறது. பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (National Center for Biotechnology Information) அதாவது NCBE படி, உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் வல்லாரை கீரையில் காணப்படுகின்றன, இது உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வல்லாரை கீரையை எப்படி சாப்பிடுவது?
உடல் எடை குறைய வேண்டுமானால் முதலில் வல்லாரை கீரையின் இலைகளை சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் தயாரித்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் கலந்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் உடல் கொழுப்பு குறைய ஆரம்பித்து, அதன் பலன் தெளிவாக தெரியுத் தொடங்கும்.

வல்லாரை கீரையை கஞ்சியாகும் உட்கொள்ளலாம், இது உடல் எடை குறைக்க உதவும். இதற்கு முதலில் புழுங்கல் அரிசி, திணை அரிசி, குதிரை வாலி அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை கழுவி குக்கரில் சேர்த்து சின்ன வெங்காயம் 6, பூண்டு பல், சீரகம், உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். பின் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். நன்கு வதங்கியதும் கஞ்சியில் கொட்டி நன்கு கலந்துகொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் தேன் உண்பவரா? அப்படியானால் இந்த 6 விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News