உணவு கட்டுப்பாடு என்பது நமது உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, டயட் இருப்பது நமது சருமத்தையும் பளபளப்பாக்க உதவுகிறது. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி அவர்களது சருமம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை தான் இருக்கும், இதற்காக பலரும் செயற்கை முறையில் மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். அத்தகைய பொருட்கள் உடனடியாக சருமத்திற்கு நல்லது செய்வது போல தெரிந்தாலும் அதன் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும். சில மருந்துகள் உங்கள் சருமத்தை உருக்குலைத்துவிடும், அதுவே இயற்கையான முறையை நாம் தேர்ந்தெடுத்தால் நமது சருமமு பளபளப்பாக இருப்பதோடு நமக்கு எவ்வித தீய விளைவுகளும் ஏற்படாது. இயற்கையான முறையில் நாம் செய்யும் எல்லாமே பலன் கொடுக்க சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் ஆனால் அது நீடித்த பலனை நமக்கு தரும். இப்போது நமது உணவில் என்னென்ன பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக வைத்து கொள்ளலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!
காலை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியவை :
ஒருவரின் அந்நாளைக்கான ஆற்றலுக்கு முக்கிய கருவியாக இருப்பது காலை உணவு தான். அந்த காலை உணவில் நீங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஷ்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களை அதிகமாகி சேர்த்து கொள்ளலாம். இதனை நீங்கள் ஓட்ஸ், தானியம், தயிர் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அடுத்ததாக அவகேடோ பழங்களில் அதிகளவு சத்து நிரம்பியுள்ளது, இதன்னை காலை உணவில் சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும்.
மதிய உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியவை :
மத்திய உணவும் உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அப்படிப்பட்ட உணவை நீங்கள் ஆரோக்கியமான முறையில் உண்ணவேண்டும். மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது, மேலும் இது வயிறு நிரப்பியது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும், முட்டைகோஸ், ப்ரக்கோலி, லெட்டியூஸ் போன்றவற்றை அதிகம் மதிய உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
மாலை நேரம் சாப்பிடவேண்டியவை:
சிட்ரஸ் வகை பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்களும், சருமத்தை பளபளப்பாக வைக்கக்கூடிய தன்மையும் நிரம்பியுள்ளது. மாலை நேர சிற்றுண்டியாக இதனை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம்.
இரவு உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியவை:
ஒரு நாளின் இறுதி உணவு தான் இரவு, இரவில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் மிதமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. மிளகில், ஆரஞ்சு பழத்தை காட்டிலும் அதிக வைட்டமின்கள் நிரம்பியுள்ளன, மிளகு உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது இதனை இரவு சாப்பாட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம். தக்காளி சரும பராமரிப்பிற்கு எவ்வளவு உதவுகிறது என்று அனைவருக்கும் நன்கு தெரியும், இரவில் தக்காளியை சேர்த்துகொள்வது சரும பளபளப்புக்கு உதவுகிறது.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ