நரை முடிக்கு இனி இதெல்லாம் தேவையில்லை, இந்த ஆயுர்வேத வைத்தியம் ஒன்று போதும்

White Hair Problem: உங்கள் வயது இன்னும் இளமையாக இருந்து, உங்கள் தலைமுடி ஏற்கனவே நரைக்க ஆரம்பித்துவிட்டால், அதற்கு ஆயுர்வேத சிகிச்சை தான் ஒரே தீர்வு.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2023, 09:19 AM IST
  • நரை முடிக்கு ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தவும்.
  • முடியை கருப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
  • உக்கிரமான பித்தத்தை அமைதிப்படுத்துவது எப்படி.
நரை முடிக்கு இனி இதெல்லாம் தேவையில்லை, இந்த ஆயுர்வேத வைத்தியம் ஒன்று போதும் title=

முன்கூட்டிய நரைப்பதும், முடி உதிர்வதும் ஒரு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. நீங்கள் ஆயுர்வேத சிகிச்சையை நம்பினால், இந்த பிரச்சனை முக்கியமாக பித்த அதிகரிப்பதால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. உடலில் பித்தம் எப்போது அதிகரிக்கத் தொடங்குகிறது? இதற்கு பதில்- நீங்கள் உங்கள் உணவில் எண்ணெய்-மசாலா அல்லது புளிப்பு பொருட்களை அதிகம் உட்கொள்ளும் போது. அதேபோல் அதிகமாக டீ, காபி, மது அருந்துபவர்களுக்கு பித்தம் அதிகரிக்கும்.

உணவுடன், உங்கள் வாழ்க்கை முறையும் பித்தத்தை ஊக்குவிக்கிறது. அதிக நேரம் உடற்பயிற்சி செய்தாலோ அல்லது அதிக நேரம் வெயிலில் இருந்தாலோ இந்தப் பிரச்சனை தோன்றும். இதுமட்டுமின்றி, ஆயுர்வேதத்தில் கோபம், சோகம், பொறாமை போன்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த சிக்கலை சமாளிக்க, ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார், அதைத் தொடர்ந்து பிணவற்றி வந்தால் உங்கள் பிரச்சினையை நிச்சயமாக தீர்க்க முடியும்.

மேலும் படிக்க | மேல் வயிறு தொப்பை குறையனுமா..அப்போ மறந்து கூட இந்த தவறை செய்யாதீர்கள்

உக்கிரமான பித்தத்தை அமைதிப்படுத்துவது எப்படி
வயிற்றின் வெப்பம் அதிகரிப்பதால், முடி விரைவில் வெள்ளையாக மாறும் என்று ஆயுர்வேதம் நம்புகிறது, எனவே உங்கள் உணவில் இனிப்பு-கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நெய்யில் உணவு சமைத்து, இலைக் கீரைகளை உண்ண வேண்டும், பெருஞ்சீரகம் அல்லது பெருங்காயம் போன்றவற்றைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

இந்த ஊக்கமளிக்கும் எண்ணெய்களைக் கொண்டு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்
ஷிரோ அபயாங், பொதுவாக தலை மசாஜ் என்று அழைக்கப்படுவது, பல்வேறு மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு செய்யப்படுகிறது. நீலிபிரிங்காதி தைலம் அல்லது பிரிங்கராஜ் தைலம் போன்ற எண்ணெய்களைக் கொண்டு இதைச் செய்யப்படுகிறது. இது உங்களை நிதானப்படுத்தும் மற்றும் அதே நேரத்தில் முடி வேர்களைத் தூண்டும்.

மூக்கில் அனு தைலம் போடவும்
மூக்கில் எண்ணெய் வைக்க அணு எண்ணெய் பயன்படுத்தலாம். அனைத்து மருத்துவக் கடையிலும் இந்த எண்ணெய் கிடைக்கும். இது பல வகையான மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை இரண்டு துளிகள் ஒவ்வொரு நாசியிலும் வெறும் வயிற்றில் போட வேண்டும். தினமும் பயன்படுத்தி வந்தால் கட்டாயம் பலன் தரும்.

முடியை கருப்பாக்குவது எப்படி என்று ஆயுர்வேத மருத்துவர் கூறும் வீடியோ இதோ:

உங்கள் உச்சந்தலையில் மூலிகை பேஸ்டை தடவவும்
இது ஒரு மூலிகை சிகிச்சையாகும், இதில் நெல்லிக்காய், வேம்பு, தேங்காய், சீகைக்காய் போன்றவற்றால் செய்யப்பட்ட பேஸ்டை உச்சந்தலையில் தடவப்படுகிறது. இந்த பேஸ்ட் குறைந்தது 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். முதலில் தலை மற்றும் முகத்தை மசாஜ் செய்து, பின்னர் மூலிகை பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும். இது உடலில் அதிகரித்த பித்தத்தை அமைதிப்படுத்துகிறது.

ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தவும்
இந்த அனைத்து வைத்தியங்களையும் தவிர, நீங்கள் விரும்பினால், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது, இது முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இளைஞர்களுக்கும் மூட்டு வலி பிரச்சனை வர காரணம் - தவிர்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News