Liver Health: ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரால் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2023, 02:38 PM IST
  • கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் எளிதாக அகற்றலாம்.
  • கல்லீரல் சரியாக செயல்படாதபோது, ​​​​கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுவதில்லை.
  • இதன் விளைவாக, பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது.
Liver Health: ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரால் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்! title=

நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிக மிக முக்கிய நாசுக்கான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கல்லீரல் பாதிப்பு என்பது உடனடியாக ஏற்படாது, உங்கள் வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உங்கள் உணவில் கவனம் செலுத்தாமல் இருக்கும் போது, இந்த வகையான பிரச்சனை ஏற்படுகிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை குறிப்பாக அதிக கொழுப்பு உணவுகளை உண்பவர்களுக்கும், ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கிறது. கல்லீரல் உயிரணுக்களில் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எதிர்காலத்தில், இது பல வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது கல்லீரல் செயலிழப்பிற்கும் வழி வகுக்கலாம். 

கல்லீரல் சேதமடைவதற்கு முன், உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும். அது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இதற்கான அறிகுறிகளை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

குமட்டல்/வாந்தி

குமட்டல் அல்லது வாந்தி அடிக்கடி ஏற்படுவது கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று. கல்லீரல் பாதிப்பினால், உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாத போது, இந்த குமட்டல் உணர்வை ஏற்படுத்துகிறது. இது பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுடன் சேர்ந்து எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

பாதங்களின் வீக்கம்

சில சமயங்களில், பாதங்களில் வீக்கம் ஏற்படும் போது சிலர் அலட்சியம் செய்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் பெரும் சிக்கலில் சிக்க நேரிடும். கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கால் வீக்கம் என்பதால், இதுபோன்ற நிலையை அலட்சியம் செய்யாதீர்கள்.

சிறுநீரின் நிறம்

உங்கள் சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையெனில் கல்லீரல் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும், ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

அதிகப்படியான சோர்வு

கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகளில் ஒன்று சோர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் எளிதாக அகற்றலாம். ஆனால் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். 

தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்

கல்லீரல் சரியாக செயல்படாதபோது, ​​​​கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுவதில்லை. இதன் விளைவாக, பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது. பிலிரூபின் அளவு அதிகரித்தால், தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம் ஏற்படும். எனவே தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறினால், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் நிறம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News