விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..

பலருக்கு கொழுப்பை குறைப்பதற்கான உணவுகள் என்னென்ன என்பது தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ், இதோ.   

Written by - Yuvashree | Last Updated : May 17, 2024, 06:20 PM IST
  • விடாப்பிடியான கொழுப்பை குறைக்க டிப்ஸ்
  • சில ஹெல்தி பழங்களை சாப்பிடலாம்
  • அவை என்னென்ன தெரியுமா?
விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க.. title=

சிலர் கலோரிகளைக் குறைப்பதற்கும், தேவையற்ற எடையைக் குறைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.  ஆனால், தேவையான அளவு கலோரிகளை விட குறைவாக சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்த காரணமாக அமையும். மேலும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் இது வழிவகுக்கலாம். இதனால் வளர்சிதை மாற்ற விகிதம் குறையலாம். எனவே, கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி, கலோரிகளை குறைக்கும் உணவுகளை இங்கு பார்ப்போம். 

ஆப்பிள்:

ஆப்பிளில் பிற உணவுகளுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரி அளவே இருக்கிறது. சாறு நிறைந்த இந்த உணவு வெயிட் லாஸ் டயட்டில் சேர்க்கப்பட வேண்டிய உணவுகளுள் ஒன்றாகும். இது குறித்து நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சியில், இதில் வெறும் 0.34 கிராம் அளவுக்கான கொழுப்புதான் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

பெர்ரி பழங்கள்:

உடலில் ஊட்டச்சச்த்தை அதிகரிக்க உதவும் பழங்களுள், பெர்ரி பழமும் ஒன்று. ஸ்ட்ரா பெர்ரி, ப்ளூ பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி பழங்கள் அதில் முக்கிய இடத்தினை பெற்றிருக்கின்றன. இந்த பழங்களை சாப்பிடுவதால் நாம் மிகவும் முழுமையாக உணர்வோம். இதனால், அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். இதனை சாலட அல்லது பழச்சாறாகவும் குடிக்கலாம். 

அவகேடோ:

அவகேடோவில் கலோரி குறைவாகவே இருக்கிறது. சாண்ட்விச் அல்லது சாலட்டுகளில் நாம் இதை கண்டிப்பாக உபயோகிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை கண்டிப்பாக தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் கே, ஏ, பி6, ஈ உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகமாக பசி ஏற்படும் போது இதை சாப்பிட்டால், நாம் அடுத்து சாப்பிடும் உணவை குறைவாக எடுத்துக்கொள்ளலாம். காரணம், இந்த பழம் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரக்கூடியது. 

வாழைப்பழம்:

அனைத்து நாட்களிலும் எல்லோராலும் சாப்பிடப்படக்கூடிய உணவுகளுள் ஒன்று, வாழைப்பழம். இதில் பொட்டாசியம், மாக்னீசியம் மற்றும் ஃபைபர் சத்துகள் நிறைந்திருக்கிறது. இது, உடலில் இருக்கும் கொழுப்பை கட்டுபடுத்தி, உடலில் இருக்கும் இன்சுலின் அளவையும் குறைக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கோடை காலத்தில் வைட்டமின் சி பழங்களை சாப்பிட வேண்டும் ஏன்?

மெலன்ஸ்:

உடல் எடையை குறைக்க உதவும் பழங்களுள் முக்கியமான வகையை சேர்ந்தவை, மெலன் பழங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் இந்த வகை பழங்களில் 92 சதவிகிதம் தண்ணீர் சத்துகள்தான் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறைவான அளவு கலோரிகளை அடக்கிய இந்த பழங்களில், வைட்டமின் சீ, பீடா சத்துகள், ஃபைபர் மற்றும் பயோ ஆக்டிவ் சத்துகள் ஆகியவை உள்ளனவாம். 

கிரேப்:

ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் ஒரு பழம் கிரேப் ஃபுரூட். இதில் புரதச்சத்துகள் நிறைந்திருப்பதோடு வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும் நிறைந்திருக்கின்றன. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த ஸ்நாக்ஸ் என்றும் கூறப்படுகிரது. மாக்னீசியம் சத்துகள் நிறைந்திருக்கும் இந்த பழத்தில் சுகர் 6.86 கிராம்தான் இருக்கும் என கூறப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News