Face Care: முகம் பிரகாசமாக இருக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்

Face Care Tips: பால் ஆடை முகம் மற்றும் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை சருமம் மிக விரைவாக உறிஞ்சிவிடுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2022, 07:34 AM IST
  • பால் ஆடையை முகத்தில் தடவுதால் ஏற்பாடும் நன்மைகள்
  • பால் ஆடையுடன் இதை கலந்து தடவினால் பலன் கிடைக்கும்
  • பால் ஆடையில் இந்த பண்புகள் உள்ளன
Face Care: முகம் பிரகாசமாக இருக்க இந்த வீட்டு வைத்தியம் போதும் title=

முக பராமரிப்பு: முகம் பொன் நிறத்தைப் பெற, முகத்தில் பால் ஆடை தடவி வந்தால், பலன் அதிகம் கிடைக்கும். இது தவிர, மேலும் பொலிவு பெற, இந்த பால் ஆடையில் சில பொருட்களைக் கலந்து முகத்தில் தடவினால் பலன் கிடைக்கும். ஒளிரும் முகத்தை யாருக்குத்தான் பிடிக்காது? அத்தகைய சூழ்நிலையில், இதற்கு உங்களுக்கு பால் ஆடை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அதை முகத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பது தான் மிகவும் முக்கியம். எனவே பால் ஆடையுடன் எதைக் கலந்த தடவினால் முகம் பளபளக்கும் என்பதை அறிவோம். 

பால் ஆடையுடன் இதை கலந்து தடவினால் பலன் கிடைக்கும்
முகம் பொலிவு பெற, 1 டீஸ்பூன் பால் ஆடையில், 1 டீஸ்பூன் கடலைமாவை கலக்க வேண்டும். இதை கலந்த பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் 20 நிமிடங்கள் தடவவும். இந்த பேஸ்ட்டினால் உங்களுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பேஸ்ட் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பால் ஆடையில் இந்த பண்புகள் உள்ளன
பால் ஆடை சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது. மேலும், தோலில் உள்ள அனைத்து டெட் செல்களையும் அகற்ற உதவுகிறது. இதைப் பயன்படுத்த, ஒரு ஸ்பூன் பால் ஆடை எடுத்து, லேசாக கைகளால் முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதுவும் உங்களுக்கு நிச்சயம் பலன் தரும். அதேபோல் உங்கள் சருமம் மிகவும் வறண்டு இருந்தால் நீங்கள் கட்டாயம் பால் ஆடை பயன்படுத்த வேண்டும்.

பால் ஆடையை முகத்தில் தடவுதால் ஏற்பாடும் நன்மைகள்

சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது
பால் ஆடையில் நிறைய கொழுப்பு உள்ளது. இது சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனுடன், தோலில் உள்ள அனைத்து டெட் செல்களையும் அகற்ற உதவுகிறது. இதைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு ஸ்பூன் பால் ஆடை எடுத்து, லேசான கைகளால் முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்
சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, பால் ஆடை பளபளப்பாகவும் உதவுகிறது. இதைப் பயன்படுத்த, அதனுடன் சிறிது தேனையும் பயன்படுத்தலாம். பால் ஆடையில் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவவும். முகத்தில் 10 நிமிடம் விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும்.

முகப்பருக்கள் பிரச்சனையை நீக்குகிறது
முகப்பருக்கள் நம் முகத்தின் அழகைக் குறைக்கிறது. அதை சரிசெய்ய நீங்கள் பால் ஆடை பயன்படுத்தலாம். இது போன்ற பிரச்சனைகளை வேரில் இருந்து நீக்கி சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது. பால் ஆடையில் உள்ள புரதம் டெட் சரும செல்களை நீக்கி புதிய செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

சுருக்கங்களை குறைக்கிறது
பால் ஆடையில் வயதான எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, முகத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாது.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News