இளம் பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

வயதில் மூத்த பெண்களை காட்டிலும் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2023, 01:32 PM IST
  • பிஆர்சிஏ1 அல்லது பிஆர்சிஏ2 பிறழ்வு போன்ற ஒரு குறிப்பிட்ட மரபணு நோயால் பாதிக்கப்படுதல்.
  • 12 வயதுக்கு முன்பே பூப்படைவது மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும்.
  • 40 வயதிற்கு முன் மார்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை எடுப்பது புற்றுநோய்க்கு காரணமாகும்.
இளம் பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா? title=

இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக மாறியுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  வயதான பெண்களை காட்டிலும் இளம்பெண்களிடம் தான் அதிகளவில் மார்பக புற்றுநோய் காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  40 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தில் கட்டியை உணர்ந்து புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.  பெரும்பாலான இளம் பெண்கள் தங்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.  மார்பக புற்றுநோய் எந்த வயதிலும் யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  

மேலும் படிக்க | மருந்தே தேவையில்லை... யூரிக் அமில பிரச்சனைக்கு சில எளிய தீர்வுகள்!

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள்:

- புற்றுநோய் அல்லாமல் மார்பில் வேறெதுவும் நோய் தாக்குதல்.

- உங்கள் குடும்பத்தை சேர்த்த தாய், மகள், சகோதரி அல்லது பிற உறவினருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது.

- 40 வயதிற்கு முன் மார்பு பகுதியில் ஏதேனும் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்வது.

- பிஆர்சிஏ1 அல்லது பிஆர்சிஏ2 பிறழ்வு போன்ற ஒரு குறிப்பிட்ட மரபணு நோயால் பாதிக்கப்படுதல்.

- 12 வயதுக்கு முன்பே பூப்படைதல்.

- குறைந்த வயதில் முதல் பிரசவம் நடப்பது.

பல இளம் பெண்கள் மார்பக புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளை கண்டுகொள்வதில்லை, ஏனென்றால் இந்த சிறிய வயதில் நமக்கு இந்நோயின் பாதிப்பு ஏற்படாது என்று நம்புகின்றனர்.  மார்பகத்தில் கட்டிகள் உருவாவது அல்லது மார்பு வித்தியாசமாக காட்சியளிப்பது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.  20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குறைந்தது மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவரிடம் சென்று தங்களது மார்பகத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு வழக்கமான மேமோகிராம் சிகிச்சைகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை.  டிஜிட்டல் மேமோகிராபி இளம் பெண்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.  மார்பக புற்றுநோயை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது அல்லது ஹார்மோன் சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற புற்றுநோய் செல்களை அழிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மார்பக புற்றுநோய் சிகிச்சையின் போது பெண்ணின் பாலுணர்வு, கருவுறுதல் மற்றும் கர்ப்பம் பாதிப்படைய நேரிடும் என்பதால் நீங்கள் சிகிச்சைக்கு முன்னர் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது.

மார்பக புற்றுநோய்க்கான முன்னெச்சரிக்கை:

- ஆரோக்கியமான எடையை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல்

- மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல்

- தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்தல்

- தாய்ப்பால் கொடுத்தல்

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News