கோவிட் சிகிச்சை பாதுகாப்பானதா? கொரோனாவின் புதிய பிறழ்வை உருவாக்கும் மருந்து! அதிர்ச்சி

COVID-19 Medicine Side Effects: கோவிட் மருந்தை பயன்படுத்தினால் கொரோனாவின் புதிய மாறுபாடு உருவாகிறதா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வின் முடிவுகளால் கொரோனா அச்சம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 26, 2023, 11:00 AM IST
  • கோவிட் சிகிச்சை பாதுகாப்பானதா?
  • பீதியளிக்கும் ஆய்வின் முடிவு
  • கொரோனாவின் புதிய பிறழ்வு அதிர்ச்சித் தகவல்
கோவிட் சிகிச்சை பாதுகாப்பானதா? கொரோனாவின் புதிய பிறழ்வை உருவாக்கும் மருந்து! அதிர்ச்சி title=

லண்டன்: கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வைரஸை மாற்றுவதற்கும் புதிய வகைகளை உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. லாகேவ்ரியோ (Lagevrio) என்ற பிராண்டின் கீழ் மருந்தகங்களில் விற்கப்படும் மோல்னுபிராவிர், கொரோனா வைரஸை அழிக்க வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், சிகிசையளித்தாலும் இந்த வைரஸ் அழியாது என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், சில சமயங்களில் இந்த வைரஸின் பிறழ்ந்த பதிப்புகள் மற்றவர்களுக்கு பரவுகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கோவிட் மருந்து உருவாக்கும் கொரோனா வைரஸ்
கோவிட் மருந்தை உட்கொள்வதன் மூலம் கொரோனாவின் புதிய மாறுபாட்டை உருவாக்க முடியுமா?  இந்தக் கேள்வி தொடர்பான புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

புதிதாக உருவாகும் கொரோனா துணை வைரஸ்களை எதிர்க்கும் தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களான Novavax, Pfizer மற்றும் BioNTech SE போன்றவை தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக இந்த ஆய்வு இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் XBB.1.5 துணை மாறுபாட்டைச் சமாளிக்க தங்கள் தடுப்பூசிகளின் புதிய பதிப்புகளை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் தடுப்பு மாத்திரை மோல்னுபிராவிர்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு, நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் வழங்கும் ஆரம்ப சிகிச்சைகளில் ஒன்று மெர்க்கின் நிறுவனத்தின் வைரஸ் தடுப்பு மாத்திரை மோல்னுபிராவிர் (Molnupiravir). வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாட்களில் வழங்கப்படும் இந்த மாத்திரை, முதன்மை வைரஸில் பிறழ்வுகளை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் வைரஸை பலவீனப்படுத்தி கொல்லுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மருந்து, உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக, புதியதாக, வைரஸின் அடுத்த பிறழ்வை உருவாக்கும் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மேலும் படிக்க | கொரோனா மட்டும் தான் அப்டேட் ஆகுமா? கோவிட் தடுப்பூசியையும் மேம்படுத்திய மடார்னா!

மோல்னுபிரவீர் வைரஸை உருவாக்கும்
லண்டனில் உள்ள பிரான்சிஸ் க்ரிக் இன்ஸ்டிடியூட் மேற்கொண்ட ஆய்வு, மோல்னுபிராவிர் 'கணிசமான பிறழ்ந்த வைரஸ்களுக்கு வழிவகுக்கும்' என்பதைக் காட்டுகிறது என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட முதன்மை ஆசிரியருர் டாக்டர் தியோ சாண்டர்சன் இதனை தெரிவித்ததாக மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆபத்தான மாறுபாடு உருவாகவில்லை
இருப்பினும், கொரோனா வைரஸின் மிகவும் ஆபத்தான மாறுபாடுகளை உருவாக்குவதற்கு மோல்னுபிராவிர் மருந்து காரணம் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பிறழ்வு காரணமாக, வைரஸின் மரபணு வேறுபாடு அதிகரித்துள்ளது என்றும், எதிர்காலத்தில் வைரஸின் ஆபத்தான மாறுபாடு உருவாததற்கான சாத்தியக்கூறுகளை மறுக்கமுடியாது என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

'மோல்னுபிராவிர் மருந்து, அதிக தொற்று அல்லது அதிக வீரியம் மிக்கதாக மாற்றியுள்ளது' என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறும் விஞ்ஞானிகள், 'இந்த சிகிச்சையால் உலகம் முழுவதும் எந்த மாறுபாடும் பரவவில்லை. ஆனால், மோல்னுபிராவிர் சிகிச்சையானது, மக்களிடம் ஏற்கனவே நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத, பரவலான பரவலான ஒரு புதிய மாறுபாட்டை உருவாக்க முடியுமா என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்’ என்றும் கருதுகின்றனர்.

மோல்னுபிராவிர் மருந்தின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் மற்றும் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும் பிற மருந்துகளை தொடர்ந்து மதிப்பிடுவதற்கு, இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | கொரோனாவின் கொள்ளுப்பேரன் எரிஸ்! கவனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News